பேனா, ஸ்பூன் பாதுகாப்பா வைக்க டூத் பேஸ்ட் கவர்... காலியானா தூக்கிப் போடாதீங்க; இனி இப்படி யூஸ் பண்ணுங்க!
நம் வீட்டு வேலைகளை சிம்பிளாகவும், அதே நேரத்தில் சுவாரசியமாகவும் மாற்றக் கூடிய சில டிப்ஸ்களை இந்த குறிப்பில் பார்க்கலாம். இவை நம் வேலையை எளிதாக்கி, நேரத்தை மிச்சப்படுத்த உதவி செய்கிறது.
நம் வேலையை எளிமையாக மாற்றும் சில கிச்சன் டிப்ஸ்களை இதில் காணலாம். தினசரி பயன்படுத்தும் பொருட்களையே வேறு ஒரு கோணத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இதில் இருந்து தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
Advertisment
நாம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் தீர்ந்து போனால் அவற்றை குப்பையில் போடுவோம். ஆனால், இனி அப்படி செய்ய வேண்டியதில்லை. அதைக் கொண்டு ஒரு ட்ரிக்கை நம்மால் செய்ய முடியும். அதன்படி, பேஸ்ட் கவரை இரண்டாக வெட்டி அதற்குள் இருக்கும் சிறிதளவு பேஸ்டை, ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளலாம்.
இப்போது, இரண்டு பாதியாக வெட்டி எடுத்த டூத் பேஸ்ட் கவர், வெளியூர் செல்லும் போது நமக்கு பெரிதும் பயன்படும். அதாவது, ஸ்பூன், பேனா, ஷேவிங் ரேசர், நாப்கின் போன்றவற்றை இந்த பேஸ்ட் கவரில் வைத்து மூடி எடுத்துச் செல்லலாம். இதற்காக மற்றொரு டப்பாவை பயன்படுத்த வேண்டியதும் இல்லை; பொருட்களும் பாதுகாப்பாக இருக்கும்.
முன்னதாக, பேஸ்டை கழுவி எடுத்த தண்ணீரையும் நாம் பயன்படுத்த முடியும். அந்த வகையில் அடுப்பின் மேற்பகுதியை இந்த பேஸ்ட் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யலாம். இதன் மூலம் எண்ணெய் பிசுக்குகள் எளிதாக நீங்கி விடும். இதேபோல், அடுப்பின் பின்புறம் இருக்கும் டைல்ஸ்களை துடைக்கவும் இதனை பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
இது மட்டுமின்றி கண்ணாடி, ஃப்ரிஜ் போன்ற பொருட்களையும் இந்த பேஸ்ட் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய முடியும். சாதாரண தண்ணீர் கொண்டு இவற்றை துடைப்பதை விட, இவை கூடுதல் சுத்தமாக இருக்கும். மேலும், இதற்காக வேறு எந்த க்ளீனிங் லிக்கியுட்-உம் கடைகளில் இருந்து வாங்க வேண்டியதில்லை. இவற்றை 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.