வெந்தயம் கூட கொஞ்சமா அரிசி... உங்க தலை முடியை அடர்த்தியாக வளரச் செய்யும் ஹேர்பேக்!
வெந்தயம், அரிசி, தயிர் மற்றும் முட்டை ஆகிய பொருட்கள் சேர்த்து நம் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஹேர்பேக் எப்படி தயாரிக்கலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
வெந்தயம், அரிசி, தயிர் மற்றும் முட்டை ஆகிய பொருட்கள் சேர்த்து நம் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஹேர்பேக் எப்படி தயாரிக்கலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
இன்றைய நிலவரப்படி முடி உதிர்வு பிரச்சனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது. வயது வித்தியாசமின்றி, ஆண் மற்றும் பெண் என்ற பாலின பேதமின்றி ஏராளமானோர் முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisment
இன்னும் சொல்லப் போனால் வயதானவர்களை விட இளம் வயதினருக்கு தான் முடி உதிர்வு பிரச்சனை தீவிரமாக இருக்கிறது. இன்றைய இளைஞர்களின் துரித உணவு வகைகள், வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், மன அழுத்தம், பணிச்சூழல் மற்றும் பொடுகு தொல்லை என பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம்.
முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்கத் தொடங்கியது முதல் ஹேர் ஆயில், ஷாம்பு, சீரம் போன்ற பொருட்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது. எனினும், இவை அனைத்தும் சரியான பலனை கொடுக்கிறதா என்று பார்த்தால் கேள்விக் குறியாகத் தான் இருக்கிறது.
இது போன்ற பொருட்களில் அதிகப்படியான இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் இவை வேறு ஏதேனும் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடக் கூடுமோ என்ற தயக்கமும் சிலரிடம் இருக்கும். அதன்படி, நம் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஹேர்பேக்கை நாமே தயாரித்துக் கொள்ள முடியும்.
Advertisment
Advertisements
அதன்படி, இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் மற்றும் அரிசியை எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அதன் பின்னர், ஒரு முட்டையை இதில் ஊற்றி, சிறிதளவு தயிர் சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஹேர்பேக் தயாராகி விடும்.
இதனை தலை முடியில் நன்றாக தேய்த்து விட்டு பின்னர் குளித்து விடலாம். இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ச்சியாக பயன்படுத்தினால், முடி உதிர்வு பிரச்சனை நீங்கி, முடி அடர்த்தியாக வளரும்.
நன்றி - Be Happy Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.