இன்றைய தலைமுறையின் பெரிய பிரச்சனை முடி உதிர்வாக இருக்குறது. இதற்கு சிலர் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து ஹேர் ஆயில், ஷம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் இரசாயனம் கலந்திருப்பதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கிறது. இந்நிலையில், வீட்டிலேயே ஹேர் ஆயில் செய்து எப்படி பயன்படுதுவது என்பதை இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.
இந்த ஹோம்மேட் ஹேர் ஆயில் செய்வதற்கு வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை முக்கியம். ஒரு மிக்ஸி ஜாரில் அரை டீஸ்பூன் வெந்தயத்தை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை அரைக்கும் போது துளி கூட தண்ணீர் சேர்க்கக் கூடாது. இதையடுத்து மூன்று கைப்பிடி கறிவேப்பிலைகளை எடுத்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.
பின்னர், அடுப்பில் இரும்பு கடாய் வைத்து 400 மி.லி செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். இரும்பு அல்லது சில்வர் கடாய் மட்டும் இதற்காக பயன்படுத்த வேண்டும். மேலும், செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்தினால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும். எண்ணெய்யை சூடுபடுத்தும் போது குறைவான அளவு நெருப்பில் வைத்தே சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் முதமான சூட்டிற்கு வந்ததும், அதில் கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் கொண்டு அரைத்த கலவையை போட்டு நன்றாக கிளறி விட வேண்டும். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் குறைவான அளவு நெருப்பில் வைத்து இதனை சூடுபடுத்த வேண்டும்.
அதன் பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி விட்டு நன்றாக ஆறவைக்க வேண்டும். இதையடுத்து, எண்ணெய்யை வடிகட்டி எடுத்தால் இரசாயனம் கலக்காத ஹோம்மேட் ஹேர் ஆயில் தயாராகி விடும். இந்த ஹேர் ஆயிலை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு முன்னர் தலையில் தேய்த்து விட்டு, காலை தலைக்கு குளிக்கலாம். இல்லையென்றால் காலை குளிப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக தலையில் தேய்த்து விட்டு, பின்னர் குளிக்கலாம்.
இதனை நீங்கள் தினசரி பயன்படுத்த வேண்டுமென்று நினைத்தால் குறைவான அளவு எண்ணெய் எடுத்து பயன்படுத்தவும். ஏனென்றால், இது மிகவும் குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“