வீட்டை அழகா வைக்கவும் கிச்சனை க்ளீனாக வைக்கவும் ஒரு சில சிம்பிளான கிச்சன் ஹேக்ஸ் பார்ப்போம்.
1. இரவில் காற்றில் காலண்டர் பேப்பர் பறந்து சத்தம் வராமல் இருக்க தேவையில்லாத பேனா மூடியை பேப்பரை ஒன்றாக சேர்த்து போட்டு விடவும்.
2.ஊதுபத்தி வைக்க வீட்டில் இடம் இல்லயா? நினைத்த இடத்தில் ஊதுபத்தி வைக்கனுமா? அப்போ ஒரு குக்கர் விசில் எடுத்து அதை திருப்பி நடுவுல இருக்க ஓட்டையில இந்த ஊதுபத்தி குச்சியை சொருகி வச்சாலே போதும் கீழ விழாம வாசனையா இருக்கும்.
3. கருகிய பாத்திரத்தை புதிது போன்று மாற்ற அடுப்பில் அந்த கருகிய பாத்திரத்தை வைத்து எவ்வளவு தூரம் கருகி இருக்கோ அவ்வளவு தூரம் தண்ணீர் ஊற்றி ஆப்ப சோடா போட்டு கலந்து ஒரு 5 நிமடம் மூடி போட்டு வைக்க வேண்டும். பின்னர் எப்போதும் போல நாறு பயன்படுத்தி தேய்த்து கழுவினால் கருகிய கரை நீங்கிவிடும்.
4.கையில் மோதிரம் கழற்ற முடியாத அளவுக்கு ரொம்ப டைட்டா இருக்கா அப்போ வாஸ்லின் கையில் தடவி மோதிரத்தை இழுத்தாலே போதும் வந்துவிடும்.
5. கம்மல் போட்டா காது இழுத்து தொங்குது அப்படிங்கற பிரச்சனை இருக்கவங்க எல்லாம் ஒரு காலியான பேனா ரீபில் குச்சி எடுத்து சின்ன துண்டா கட் பண்ணி அதோட சைடு பக்கத்தை ஒரு கல்லில் தேய்த்து எடுக்கவும். அப்புறம் அதை கம்மலில் போட்டு காதில் போட்டு காது இழுக்கும் பிரச்சனை இருக்காது.
6. கை மூட்டு, கால் மூட்டுல கருப்பா புள்ளி புள்ளியா இருக்கா? அப்போ தொடர்ச்சியா வாஸ்லின் தடவி வந்தால் போதும் கருமை நீங்கும்.
7. பாகற்காய் வாடாமல் பழம் ஆகாமல் இருக்கு அதன் இரண்டு பக்கமும் சிறிது நறுக்கி காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“