சாதம் சீக்கிரம் கெடாமல் இருக்க... பூரி ரொம்ப நேரம் புசுன்னு இருக்க; இந்த கிச்சன் டிப்ஸ் நோட் பண்ணுங்க!
அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சில எளிமையான கிச்சன் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் நம் வேலையை திறம்பட செய்ய முடியும்.
அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சில எளிமையான கிச்சன் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் நம் வேலையை திறம்பட செய்ய முடியும்.
ஒரு குடும்பத்தில் சமையல் மற்றும் வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கு விடுமுறை என்பதே இருக்காது. தினசரி அவர்களின் வேலையை செய்து கொண்டிருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள். மற்றவர்கள் உதவி செய்தாலும், முழுமையான வேலையை முடிக்க ஒரு நாள் போதாது என்ற நிலை தான் இருக்கும்.
Advertisment
இப்படி நாள்தோறும் வேலை செய்பவர்கள், தங்கள் பணியை சுலபமாக்க ஏதாவது டிப்ஸ் இருக்கிறதா என்று யோசிப்பார்கள். அந்த வகையில், நமது பணியை எளிமையாகவும், திறம்படவும் செய்து முடிப்பதற்கான சில வழிமுறைகளை இதில் காணலாம்.
நம்முடைய வீட்டில் நிறைய பாலித்தீன் கவர்கள் இருக்கும். இதனை குப்பையில் தான் போடுவோம். ஆனால், இதன் மூலமாக ஒரு பயன் இருக்கிறது. இந்த பாலித்தீன் கவர்களை ஓரளவிற்கு சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை, வீட்டில் இருக்கும் ஸ்விட்ச் போர்டுகளின் மேல் பகுதியில் ஒட்டி விட வேண்டும். இப்படி செய்தால் ஈரக்கையால் ஸ்விட்சை ஆஃப் செய்வது தடுக்கப்படும். இதனால் ஸ்விட்ச் போர்டும் அழுக்கு அடையாமல் இருக்கும்.
இரவு நேரத்தில் வாஷ் பேசின் துவாரத்தில் இருந்து துர்நாற்றம் வரும். இதேபோல், இந்த பகுதியில் இருந்து கரப்பான் பூச்சிகளும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, பழைய நியூஸ் பேப்பரை சிறிய துண்டாக கிழித்து அதனை தண்ணீரில் லேசாக நனைத்து, அந்த துவாரத்தில் அடைத்து விடலாம். இப்படி செய்தால் அதில் இருந்து துர்நாற்றம் வருவது கட்டுப்படுத்தப்படும். மேலும், கரப்பான் பூச்சிகளாலும் அப்பகுதியில் இருந்து வர முடியாது.
Advertisment
Advertisements
சில சமயத்தில் சாதம் வடிக்கும் போது, அதில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேறாமல் இருந்தால் அவை சீக்கிரம் கெட்டு விடும் அல்லது நீர்த்துப் போகும். இதனை எளிமையாக தடுக்க முடியும். அதன்படி, சாதம் வடித்த பின்னர் அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 அல்லது 3 விநாடிகளுக்கு நன்றாக சூடுபடுத்த வேண்டும். இப்படி செய்தால் அதில் இருக்கும் தண்ணீர் முழுவதும் ஆவியாகி வெளியேறி விடும்.
வீட்டில் பூரி செய்யும் போது கடைகளில் இருப்பதை போன்று உப்பலாக இல்லையே என்று பலரும் நினைப்பார்கள். இதற்காக பூரி செய்யும் போது ஒரு பொருள் மட்டும் கூடுதலாக சேர்த்தால் போதும். அதன்படி, பாதி கப் அளவிற்கு தண்ணீருடன் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் ரவை மற்றும் நெய் சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு படுத்த வேண்டும். அதன் பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விட்டு ஒரு கப் கோதுமை மாவை இதில் போட வேண்டும். இதையடுத்து, மாவு ஆறியதும் அதனை பிசைந்து கொள்ளலாம். இதன் பின்னர், பூரியை சுட்டு எடுத்தால் அவை நீண்ட நேரமானாலும் புசு புசுவென்று இருக்கும்.