/indian-express-tamil/media/media_files/2025/10/14/download-59-2025-10-14-17-05-44.jpg)
தினமும் சமையலறையில் நேரம் செலவிடும் பெண்கள் மற்றும் சமையலின் மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும், வேலை சற்று சுலபமாக மற்றும் புத்துணர்வாக செல்ல வேண்டுமென்றால், சில சின்ன ஹேக்குகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த தீபாவளிக்கு முன் உங்கள் வீட்டில், சமையல் மற்றும் பராமரிப்பு வேலைகளை எளிதாக்க, கீழே வழங்கப்பட்டுள்ள 5 சூப்பர் கிச்சன் ஹேக்குகளை நீங்கள் மறக்காமல் முயற்சி செய்யுங்கள்.
ஹேக் 1: மிக்சர் ஜார் பிளேடு சுழற்சி மந்தமா? இந்த ஹேக் உதவிகரமாக இருக்கும்!
- மிக்சர் ஜார் வேகமாக சுழலவில்லை என்றால்,
- முதலில் பிளேடின் மேல் தேங்காய் எண்ணெய் தடவவும்.
- ஜாரின் கீழ் பகுதியிலும் வாசலின் அப்ளை செய்யவும்.
இது ஜார் சுழற்சியை நன்கு லூசாக, சீராக செய்யும்.
மேலும், ஜாரில் சிறிதளவு உப்பு சேர்த்து கிரைண்டு செய்தால், பிளேடு ஷார்ப்பாகி மிக்சர் வேகம் அதிகரிக்கும்!
ஹேக் 2: கொத்தமல்லி இலை 10 நாட்கள் பசுமையாக வைக்க வேண்டுமா?
- கொத்தமல்லியில் ஒரு ஸ்பூன் வைத்து அதன் மேல் ஒரு பருத்தி துணியில் கட்டிக்கொள்ளவும்.
- அதை ஒரு ஏர்டைட் பாக்ஸில் வைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.
- இந்த ஹேக்கைப் பின்பற்றினால் 10 நாட்கள் வரை கொத்தமல்லி இலை பசுமையாக இருக்கும்!
ஹேக் 3: உபயோகித்த குக்கரை 2 வருடங்கள் வரை பாதுகாக்க விரும்புகிறீர்களா?
- தினசரி பயன்படுத்திய பின், குக்கரை நன்றாக சுத்தம் செய்து,
- அதன் மேல் வாயை மூடி ஃபிரீஸரில் வைக்கவும்.
- இப்படி வைப்பதன் மூலம் குக்கர் எளிதில் கெட்டுப்போவதில்லை; 2 வருடங்கள் வரை பாதுகாப்பாக இருக்கும்!
ஹேக் 4: சாப்பிங் போர்டு எவ்வளவு கழுவினாலும் வாசனை போகவில்லையா?
சாப்பிங் போர்டு மீது:
- 1 ஸ்பூன் பேக்கிங் சோடா
- 1 ஸ்பூன் இன்ஸ்டன்ட் காப்பி பவுடர்
- இரண்டும் சேர்த்து நன்கு தேய்க்கவும்.
- பிறகு சுத்தம் செய்து, உலர்ந்த பிறகு, மேல் தேங்காய் எண்ணெய் தடவவும்.
இப்படி செய்தால் சாப்பிங் போர்டு 1 மாதம் வரை புதியது போல வாசனை மற்றும் பளிச்சென்று இருக்கும்!
ஹேக் 5: பழைய முட்டையின் ஓடு கூட உபயோகமா?
முட்டையின் ஓட்டை சுத்தம் செய்து, வெயிலில் உலர்க்கவும்.
பின்னர்:
- 1 ஸ்பூன் சிட்ரிக் அசிட்
- 1 ஸ்பூன் சோப்புப் பொடி
- உலர்ந்த முட்டை ஓடு. இவற்றை ஒன்றாக நன்றாக பவுடராக்கி பாட்டிலில் சேமிக்கவும்.
இந்த பவுடரை சுத்தம் செய்ய கஷ்டமான பாத்திரங்களில் பயன்படுத்தினால், அது புதிய பாத்திரம் போல ஜொலிக்கும்!
சிறிய ஹேக்குகள் என்றாலும், உங்கள் சமையலறையில் நேரத்தை மிச்சப்படுத்தி, சீரான பராமரிப்புக்கு வழிவகுக்கும். இந்த தீபாவளி கிளீனிங் சீசனில், இவற்றை முயற்சி செய்து பாருங்கள் — உங்கள் வீட்டும் ஜொலிக்கும், உங்களும் ஸ்மார்ட் குக்கிங் குயின் ஆக மாறுவீர்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.