வீட்டை பராமரிப்பது என்பது சவாலான காரியம். குறிப்பாக, கிட்சனை சுத்தமாக வைத்திருப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. ஆனால், சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அவை என்னவென்று தற்போது நாம் காணலாம்.
வீட்டில் இருக்கும் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லைகளுக்கு சுலபமாக தீர்வு காண முடியும். இதற்கு ஒரு பச்சை மிளகாய், ஒரு பூண்டு, 6 மிளகுகள் ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். இந்த நீரை வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பின்னர், கிட்சன் உள்ளிட்ட வீட்டில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த நீரை தெளிக்கவும். இவ்வாறு செய்தால் கரப்பான் பூச்சிகள், பல்லி, எறும்புகள் உள்ளிட்டவற்றின் தொல்லைகள் இருக்காது. மேலும் வெங்காயம் பூண்டு தோல்களை தண்ணீரில் ஊறவைத்து அதையும் பயன்படுத்தலாம்.
சாப்பிடுவதற்காக வாங்கி வரும் வாழைப் பழங்கள் சீக்கிரமாக பழுத்து அழுகி விடும். இதனை மிக சுலபமாக தடுத்து விடலாம். நாம் சாப்பிடுவதற்கு எடுத்த பழங்கள் போக மீதமுள்ள பழங்களின் காம்பு பகுதிகளை, சில்வர் பேப்பர் கொண்டு சுற்றி வைக்கலாம். இவ்வாறு செய்தால் பழங்கள் சீக்கிரம் அழுகாமல் தடுக்க முடியும்.
தோசை கல்ல ஐஸ் கட்டி மட்டும் போட்டு பாருங்க/kitchen tips in tamil
தோசைக்கல்லில் மிருதுவாக தோசை ஊற்ற கல்லை மிருதுவாக சூடு செய்து அதன்மேல் ஐஸ் கட்டிகளை வைத்து தேய்த்தால் தோசை மென்மையாக மெல்லிசாக வரும்.
வெங்காயத்தையும், உருளை கிழங்கையும் ஒரே இடத்தில் வைக்க கூடாது. இவ்வாறு வைப்பதால், உருளை கிழங்கில் பூஞ்சை வரும். எனவே, அவற்றை தனியாக வைக்க வேண்டும்.
அஞ்சறைபெட்டியை சுத்தம் செய்த பின் அதில் செய்தித்தாள் போட்டு வைத்தால் பழைய மசாலாக்களின் வாசம் நீங்கிவிடும். காய்கறி நறுக்கும் கட்டையின்மேல் எண்ணெய் காகிதத்தை தேய்த்தால் போதும் கட்டையில் உள்ள வழவழப்பு நீங்கிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“