வீட்டை பராமரிப்பது என்பது சவாலான காரியம். குறிப்பாக, கிட்சனை சுத்தமாக வைத்திருப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. ஆனால், சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அவை என்னவென்று தற்போது நாம் காணலாம்.
தினமும் கிட்சனில் நாம் பயன்படுத்தும் கேஸ் அடுப்பின் லைட்டர் அழுக்கு படிந்து காணப்படும். இவற்றை எப்படி சுத்தப்படுத்துவது என்று தெரியாமல் பலரும் குழப்பம் அடைவார்கள். இதனை எவ்வாறு சுத்தப்படுத்துவது என இப்பதிவில் பார்க்கலாம்.
நாம் பல் தேய்ப்பதற்காக பயன்படுத்தும் பேஸ்டை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை, லைட்டரின் வெளிப்புற பகுதி முழுவதுமாக அழுத்தி தேக்க வேண்டும். இதையடுத்து, பாத்திரம் தேய்க்க பயன்படும் ஸ்க்ரப்பரை எடுத்து லைட்டரை நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் லைட்டரில் இருக்கும் கறைகள், அழுக்குகள் அனைத்தும் நீங்கி விடும்.
சுவற்றில் ஆணி அடிக்கும் போது துவாரம் சற்று பெரிதாகி விட்டால், ஆணி சரியாக அதில் இருக்காது. அப்போது, சோப்பை சிறிய துண்டாக எடுத்து அந்த துவாரத்தின் உள்ளே வைக்க வேண்டும். இப்போது, துவாரத்தில் ஆணியை வைத்தால் கீழே விழாமல் இருக்கும்.