ஒரே நிமிட வேலை... பழைய சாம்பாருன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க: ஈசி கிச்சன் டிப்ஸ்
நம் அன்றாட கிட்சன் பணியை எளிமையாக மாற்றும் சூப்பரான டிப்ஸ் சிலவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இவை நம் பணியை சுலபமாக்குகின்றன. இவற்றை பின்பற்றுவதும் எளிதானது.
நம் அன்றாட கிட்சன் பணியை எளிமையாக மாற்றும் சூப்பரான டிப்ஸ் சிலவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இவை நம் பணியை சுலபமாக்குகின்றன. இவற்றை பின்பற்றுவதும் எளிதானது.
நம் வீட்டில் சாம்பார் மீதமாகி போனால், அதனை ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் பயன்படுத்தலாம் எனக் கருதுவோம். எனினும், அடுத்த நாள் அந்த சாம்பாரை சூடுபடுத்தி பயன்படுத்தினால் அது ஃப்ரெஷ்ஷாக இருக்கும் உணர்வை கொடுக்காது. ஆனால், சில வழிமுறைகளை கையாளும் போது, இவை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
Advertisment
இதற்காக அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய், அரை டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து சூடுபடுத்த வேண்டும். இவை சூடாகி வரும் போது சிறிதளவு காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இந்த இரண்டும் பொறிந்து வரும் போது அரை டீஸ்பூன் அளவு மட்டும் சாம்பார் பொடி சேர்க்க வேண்டும்.
இதனை நன்றாக கலந்து விட்ட பின்னர், ஏற்கனவே இருக்கும் சாம்பாரை ஊற்ற வேண்டும். இந்த சாம்பார் கொதிக்கும் போது தேவையான அளவு கொத்தமல்லி இலைகளை சேர்க்கலாம். இப்படி செய்தால் ஃப்ரெஷ்ஷாக வைத்த சாம்பாரின் சுவை கிடைக்கும்.
இதேபோல், சிக்கன் 65-ஐ சாஃப்டாக பொறிக்க ஈசியான ஒரு டிப்ஸை பார்க்கலாம். சிக்கன் 65-க்கு தேவையான மசாலா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை சிக்கனுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இறுதியாக சிக்கனுடன் அரை ஸ்பூன் அளவு சோயா சாஸ் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான சிக்கன் 65 சாஃப்டாக வரும்.
Advertisment
Advertisements
மேலும், அதிகமாக பழுத்த வாழைப்பழங்கள் விரைவாக அழுகி விடும் அபாயம் கொண்டவை. ஆனால், இவை கெட்டுப்போகாமல் இருக்க ஒரு ட்ரிக் இருக்கிறது. இந்த வாழைப்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் இருக்கும் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது வாழைப்பழங்கள் விரைவாக அழுகாமல் இருக்கும்.