Easy Lunch Box Recipes: இந்த தொற்று நோய் காலத்தில் வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகளை நம்மில் பலரும் கையாளுகிறோம். இதற்கிடையே எளிதாக ஆரோக்கியமாக, ஒவ்வொரு நாளும் என்ன சமைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது மிகவும் கடினமான ஒன்றாகியிருக்கிறது. ஆனால் கவலைப் படாதீர்கள்... அந்த முடிவை எடுக்க உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம். நீங்கள் ஒரு சாத (அரிசி) பிரியராக இருந்தால் இன்னும் நல்லது. உங்களுக்கு பிடித்த உணவை சத்தானதாக மாற்றுவது எப்படி என நாங்கள் சொல்கிறோம்.
Advertisment
ஆயுர்வேத மருத்துவரும், உணவியல் நிபுணருமான டாக்டர் டிக்சா பாவ்சர் இந்த ரெசிபியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
“நீங்கள் ஆரோக்கியமான மற்றும் சுவையான அரிசி உணவை முயற்சிக்க விரும்பினால், இது உங்களுக்கானது. எளிதானது மற்றும் விரைவானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஞ்சள், உப்பு, சீரகம், கடுகு மற்றும் பெருங்காயம் போன்ற மசாலாப் பொருட்கள்.
செய்முறை
* முதலில், அரிசியை 20 நிமிடங்கள் வேகவைக்கவும். அது வெந்ததும், 10 நிமிடங்கள் ஆற வைக்கவும்.
* ஒரு கடாயை எடுத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
* சூடாகும் வரை இரண்டு-மூன்று நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் ஒரு சிட்டிகை பெருங்காயம், சீரகம் மற்றும் கடுகு ஆகியவற்றைச் சேர்க்கவும். நீங்கள் விரும்பினால் கறிவேப்பிலையும் சேர்க்கலாம்.
* பின்னர் மஞ்சள், உப்பு, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் நீங்கள் சேர்க்க விரும்பும் வேறு எதையும் சேர்க்கவும். அதோடு வேக வைத்த சாதத்தை கலந்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும். அடுப்பை அணைத்து, துருவிய கேரட், பீட்ரூட் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும். அவ்வளவு தான் உங்கள் ஆரோக்கியமான, சுவையான சாதம் ரெடி!
டிப்ஸ்
நீங்கள் விரும்பினால் மற்ற காய்கறிகளையும் சேர்க்கலாம்.
குறிப்பு: குறைவான வளர்சிதை மாற்றத்தைக் கொண்டவர்கள், பச்சையை விட வேகவைத்த காய்கறிகளைப் பயன்படுத்துவது சிறந்தது. நீங்கள் அரிசியில் சேர்ப்பதற்கு முன் காய்கறிகளை வேகவைக்கலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”