இதை நீங்கள் ரெடி செய்து வைத்தால் போதும். தேவைபட்ட நேரத்தில் குலாப் ஜாமுன் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் பால் பவுடர்
கால் கப் மைதா
2 ஸ்பூன் ரவை
கால் ஸ்பூன் பேக்கிங் சோடா
2 ஸ்பூன் நெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, ரவை, பேக்கிங் சோடா, நெய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதை இறுக்கமான பாத்திரத்தில் போட்டு, நாம் 6 மாதம் வரை வைக்கலாம். நமக்கு எப்போது குலாப் ஜாமுன் செய்ய வேண்டும் என்று நினைத்தால், இதில் 3 கப் பால் சேர்த்து, குலாப் ஜாமுன் வடிவில் உருண்டை பிடித்துக் கொள்ளவும். தொடர்ந்து இதை எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். தொடர்ந்து 1 கப் சர்க்கரை 2 கப் தண்ணீரில் சேர்த்து, கொஞ்சம் குங்குமப் பூ சேர்த்து பாகு காய்ச்சவும். தொடர்ந்து இதை நாம் சேத்துகொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“