Advertisment

ஐந்தே நிமிடத்தில் சுவையான மல்லி சட்னி ரெடி!

Malli Chutney வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து சுவையான மல்லி சட்னி எப்படிச் செய்வது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Malli Chutney Breakfast Coriander Chutney Recipe Tamil

Malli Chutney Breakfast Coriander Chutney Recipe

Malli Chutney Recipe Tamil : காலை டிபனுக்கு எப்போதும் வெங்காயம், தக்காளி என ஒரேபோன்ற சட்னி அரைத்து சலித்துப்போனவர்களுக்கு மிகவும் வித்தியாசமான அதே நேரத்தில் எளிமையாகச் செய்யக்கூடிய இந்த கொத்தமல்லி சட்னி நிச்சயம் கைகொடுக்கும். வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து சுவையான மல்லி சட்னி எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருள்கள்

கொத்தமல்லி - 1 கப்

நறுக்கிய தேங்காய் - 1/2 கப் (துருவிய தேங்காய் என்றால் 1/4 கப் போதும்)

பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 4

பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை

பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் மற்றும் தோராயமாக நறுக்கிய தேங்காய் துண்டுகளுடன் கொத்தமல்லி இலைகளை (தோராயமாக நறுக்கவும்) மிக்சி ஜாரில் சேர்த்துக்கொள்ளவும்.

இரண்டு டீஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து, இந்தக் கலவையைச் சட்னி பதத்திற்கு அரைக்கவும்.

அரைத்த சட்னியை சுத்தமான உலர்ந்த கிண்ணத்தில் மாற்றி அதனோடு உப்பு சேர்த்து, தாளிப்பதற்காகத் தயார் செய்யுங்கள்

சூடான வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சேர்க்கவும்.

கடுகு வெடித்ததும், பெருங்காயம், உளுத்தம்பருப்பு மற்றும் முழு சிவப்பு மிளகாயை அதனோடு சேர்க்கவும்.

உளுத்தம்பருப்பு சிறிது பழுப்பு நிறமாக மாறிய பின் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து, ஏற்கெனவே தயாரித்து வாய்த்த சட்னியோடு சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment