Easy Upma Recipes: நீங்கள் நேரடியாக சிறுதானிய மாவுகளைப் பயன்படுத்துபவர்கள் என்றால், இது உங்களுக்கானது. சிறு தானியத்தை சமைப்பதற்கு முன்பு, அவை குறைந்தது எட்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றில் உள்ள நார்ச்சத்து மிகவும் அடர்த்தியானது. அதனால் அவற்றில் உள்ள பைடிக் அமிலத்தை உடைத்து அதிலுள்ள, ஊட்டச்சத்துக்களை வெளியேற்ற அனுமதிக்க வேண்டும். சிறுதானியத்தை ஊறவைத்த பின் நீங்கள் எப்போதும், மாவை வீட்டிலேயே செய்யலாம். இது மிகவும் எளிதானது!
நீங்கள் வீட்டில் சிறுதானிய மாவுகளை தயாரிக்கும்போது, அதிலிருக்கும் குருணை பகுதியை பிரித்தெடுக்கலாம். ஆனால் முழு தானியத்திலிருந்து நேரடியாக உப்புமா செய்ய விரும்பினால், இது நீங்கள் முயற்சி செய்யக்கூடிய ரெசிப்பி. இங்கே சிவப்பு சோளத்தை பயன்படுத்தி எவ்வாறு உப்புமா செய்வது என்பதை குறிப்பிட்டுள்ளோம். ஆனால் இதே முறையை மனதில் வைத்து வெவ்வேறு வகையான சிறுதானிய உப்புமாவை நீங்கள் செய்யலாம்.
தேவையானப் பொருட்கள்
1 கப் - முழு சிவப்பு சோளம் (8-10 மணி நேரம் கழுவி ஊறவைக்கப்பட்டது)
1 வெங்காயம் - நன்றாக நறுக்கியது
1 கேரட் - நன்றாக நறுக்கியது
சிறிய க்யூப் போல நடுக்கிய 1 மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு
1/4 கப் பீன்ஸ் - நன்றாக நறுக்கியது
2 டீஸ்பூன் வறுத்து உடைத்த வேர்க்கடலை
1 இஞ்ச் அரைத்த இஞ்சி
2 பச்சை மிளகாய் (விரும்பினால்)
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
சுவைக்கேற்ப உப்பு
2 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்
1/2 டீஸ்பூன் கடுகு
¼ தேக்கரண்டி வெந்தயம்
20-25 கறிவேப்பிலை
2 டீஸ்பூன் நெய்
4 கப் தண்ணீர்
ஃப்ரெஷ் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள்
செய்முறை
சிவப்பு சோளத்தை ஒரே இரவில் அல்லது குறைந்தது 8-10 மணி நேரம் தண்ணீரில் நன்கு கழுவி ஊற வைக்கவும்.
பிரஷர் குக்கரில் சமைக்க சோளத்தை 4 கப் தண்ணீர், உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து, நடுத்தர வெப்பத்தில் 2 விசில்களுக்கு வேக வைக்கவும்.
அனைத்து காய்கறிகளையும் தனியாக வேக வைக்கவும். இதில் நீங்கள் விரும்பும் எந்த காய்கறிகளையும் சேர்க்கலாம்.
ஒரு ஆழமான கடாயில், நெய் விட்டு, கடுகு வெந்தயம் சேர்க்கவும். அவை வெடித்ததும், கறிவேப்பிலை சேர்த்து, இறுதியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்க்கவும். வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
அடுத்து, வேகவைத்த காய்கறிகள், மஞ்சள் தூள், வேகவைத்த சோளம், கல் உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். உங்கள் சுவைக்கு ஏற்ப சுவையூட்டல்களை இதில் சேர்க்கலாம். பின்னர் இறுக்கமான மூடியால் 5 நிமிடம் கடாயை மூடி வேக விடவும்.
நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
இறுதியாக உடைத்த வேர்க்கடலை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை தூவவும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”