Oats Dosa, Oatmeal Dosa Recipe: ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் உடல் மட்டுமின்றி, மனமும் ஆரோக்கியமாக இருக்கும். கார்போ ஹைட்ரேட்டை குறைவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு அருமையான தோசை ஐடியாவை தருகிறோம்.
Advertisment
தேவையானப் பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
Advertisment
Advertisements
ரவை - 1/4 கப்
தயிர் - 1/2 கப்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கோப்பையில் ஒட்ஸ், அரிசி மாவு, ரவை, தயிர், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.
இந்த கலவையை 10-15 நிமிடம் அப்படியே விட்டு ஊற வைக்க வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி எடுத்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை ரெடி!!!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”