செடிக்கு 3 நாளைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம்; ஹாயாக டூர் போயிட்டு வரலாம்; இந்த டிரிக் டிரை பண்ணுங்க!
3 நாட்கள் வெளியூர் சென்றால், செடிகளுக்கு யார்? தண்ணீர் ஊற்றுவார்கள், அவை காய்ந்துவிடுமோ என்ற பயமும் எழும். இந்தக் கவலைகளுக்கெல்லாம் எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள தீர்வுதான் சுய-நீர்ப்பாசன முறை (Self-Watering System).
3 நாட்கள் வெளியூர் சென்றால், செடிகளுக்கு யார்? தண்ணீர் ஊற்றுவார்கள், அவை காய்ந்துவிடுமோ என்ற பயமும் எழும். இந்தக் கவலைகளுக்கெல்லாம் எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள தீர்வுதான் சுய-நீர்ப்பாசன முறை (Self-Watering System).
செடிக்கு 3 நாளைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம்; ஹாயாக டூர் போயிட்டு வரலாம்; இந்த டிரிக் டிரை பண்ணுங்க!
மாடியில் தோட்டம் அமைப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது அது வழிந்து தரையை வீணாக்கி விடுமோ? என்ற கவலை நம்மில் பலருக்கும் இருக்கும். அதேபோல, 2 அல்லது 3 நாட்கள் வெளியூர் சென்றால், செடிகளுக்கு யார்? தண்ணீர் ஊற்றுவார்கள், அவை காய்ந்துவிடுமோ என்ற பயமும் எழும். இந்தக் கவலைகளுக்கெல்லாம் எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள தீர்வுதான் சுய-நீர்ப்பாசன முறை (Self-Watering System). இந்த முறை, உங்கள் செடிகளுக்குத் தேவையான தண்ணீரைத் தானாக வழங்கும் புத்திசாலித்தனமான உத்தி. குறிப்பாக கோடை வெயிலுக்கு, செடிகளுக்குப்போதுமான ஈரப்பதம் கிடைப்பதை உறுதிசெய்ய சிறந்த வழியாகும்.
Advertisment
சுய-நீர்ப்பாசன முறையின் நன்மைகள்
தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாவதைத் தடுக்கும். தண்ணீர் வழிந்து தரை அழுக்காவதை அல்லது வீணாவதைத் தடுக்கும். அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் குறையும். சில நாட்கள் வெளியூர் சென்றாலும் செடிகள் காய்ந்து போகாது. செடிகளுக்கு எப்போதும் தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும். இதனால், அவை செழிப்பாக வளரும். மல்லிகை, தக்காளி போன்ற செடிகள் கடுமையான வெயிலிலும் கூட பசுமையாகவும், செழிப்பாகவும் வளர்வதை இந்த முறை உறுதி செய்கிறது.
சுய-நீர்ப்பாசன முறை எப்படி வேலை செய்கிறது?
Advertisment
Advertisements
செடி தொட்டியின் அடியில் தண்ணீர் சேகரிக்கும் பகுதி இருக்கும். செடிக்கு ஊற்றும் அதிகப்படியான தண்ணீர் கீழ் தொட்டியில் சேகரமாகும். பின்னர், பனியன் துணி அல்லது தடிமனான காட்டன் நூல் போன்ற உறிஞ்சும் பொருள், இந்தத் தண்ணீரை அடியில் இருந்து மெதுவாக உறிஞ்சி, மண்ணின் வழியாக செடியின் வேர்களுக்குக் கொண்டு செல்லும். இதனால், செடிக்குத் தேவையான நீர் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.
சுய-நீர்ப்பாசன முறை உருவாக்குவது எப்படி?
தேவையான பொருட்கள்: செடி வளர்க்கும் தொட்டி, பிளாஸ்டிக் கண்டெய்னர், பனியன் துணி அல்லது தடிமனான காட்டன் நூல், மண் கலவை, நீங்கள் நடவு செய்ய விரும்பும் செடிகள் (தக்காளி, மல்லிகை, புதினா, காய்கறி செடிகள், பழ செடிகள் எதுவாகவும் இருக்கலாம்)
முதலில், செடி தொட்டியின் அடியில் வைப்பதற்கான பிளாஸ்டிக் கண்டெய்னரைத் தேர்வு செய்யவும். இது நல்ல உறுதித்தன்மையுடன் இருப்பது அவசியம். பனியன் துணி (அ) காட்டன் நூலை 4 நீளமான துண்டுகளாக வெட்டவும். இந்த துண்டுகள், கீழே உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து செடி தொட்டியின் மண் வரை நீளமாக இருக்க வேண்டும். செடி தொட்டியின் அடியில், வெட்டிய துணிகளை/நூல்களைப் பரவலாக வைக்கவும். அதன் ஒரு பகுதி கீழேயுள்ள தண்ணீர் தொட்டியிலும், மறுபகுதி மேல்நோக்கி மண்ணுக்குள்ளும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மண்ணின் எல்லாப் பகுதிகளுக்கும் ஈரப்பதம் சீராகப் பரவ இது உதவும்.
மண் நிரப்புதல்: இப்போது, இந்த அமைப்பை கீழேயுள்ள தண்ணீர் தொட்டியின் மீது வைத்து, செடி தொட்டியில் பாதி அளவிற்கு மண் கலவையை நிரப்பவும். மண் கலவையுடன் சாம்பல், முட்டை ஓட்டுப் பொடி, உரம் போன்றவற்றைச் சேர்ப்பது செடி வளர்ச்சிக்கு உதவும். மண் கலவை நிரப்பிய பின், நீங்கள் தேர்வு செய்த செடிகளை நடவு செய்யவும். பொதுவாக, ஒரு தொட்டியில் ஒரு செடி வளர்ப்பது நல்லது. ஆனால், இந்த சுய-நீர்ப்பாசன முறையில், இரண்டு செடிகள் கூட செழிப்பாக வளர்கின்றனவா என்பதைப் பரிசோதித்து அறியலாம். செடிகளை நடவு ய்த பின், தொட்டியின் மேல் பகுதி வரை மண் கலவையை நிரப்பவும். செடிகளை நடவு செய்த முதல் முறை, தொட்டியின் ஓட்டைகள் வழியாக தண்ணீர் வெளியேறும் அளவுக்கு தாராளமாக ஊற்றவும். இது மண்ணில் சீரான நீர்ப்பாதை உருவாக உதவும். இந்த முறை அமைத்த பின், தினமும் வழக்கம்போல் தண்ணீர் ஊற்றினால் போதும். அதிகப்படியான தண்ணீர் கீழே சேமிக்கப்பட்டு, தேவைப்படும்போது செடிக்கே மீண்டும் கிடைக்கும்.
இந்த எளிய சுய-நீர்ப்பாசன முறை மூலம், கோடைக்காலத்திலும் செடிகள் காய்ந்துவிடாமல், எப்போதும் செழிப்பாகவும், பசுமையாகவும் வளரும்.