நம் வீடுகளில் எவ்வளவு தான் சேலையை மடித்து வைத்தாலும், துணிக் கடைகளில் இருப்பதை போன்று சீராக இல்லையே என நாம் கருதுவது உண்டு. ஒரு தோசைக் கரண்டி இருந்தாலே போதும், நாமும் சேலையை சுலபமாக மடித்து விடலாம்.
ஒரு தோசைக் கரண்டியை எடுத்து சேலையின் நுனிப்பகுதியில் வைத்து, உட்புறமாக சேலையை மடிக்க தொடங்க வேண்டும். அப்போது, கீழ்ப்பகுதியில் ஏற்படும் சிறிய சுருக்கங்களை மெலிதாக உதறி விட்டாலே போதும். இவ்வாறு சேலையை முழுவதுமாக மடித்த பின்னர், அதில் இருக்கும் தோசைக் கரண்டியை வெளியே எடுத்து விட வேண்டும்.
அதன் பின்னர், சேலையை நான்கு மடிப்புகளாக மடிக்க வேண்டும். இப்படி செய்தால் துணிக் கடைகளில் இருப்பதை போன்று சுருக்கங்கள் இல்லாமல் சேலையை எளிதாக மடிக்கலாம்.
இது மட்டுமின்றி கிட்சன் பராமரிப்பில் தேவைப்படும் சூப்பரான வழிமுறையையும் இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
சாப்பிடுவதற்காக வாங்கி வரும் வாழைப்பழங்கள் சில நேரங்களில் சீக்கிரமாக பழுத்து அழுகி விடும். இதனால், பழங்கள் வீணாகி விடும். இதனை மிக சுலபமாக தடுத்து விடலாம். நாம் சாப்பிடுவதற்கு எடுத்த பழங்கள் போக மீதமுள்ள பழங்களின் காம்பு பகுதிகளை, சில்வர் பேப்பர் கொண்டு சுற்றி வைக்கலாம். இவ்வாறு செய்தால் பழங்கள் சீக்கிரம் அழுகாமல் தடுக்க முடியும்.