இந்த 2 இலை போதும்... நம்ம ஹெல்த் பாதிக்காம ஈ, கொசுவை விரட்ட ஈசி டெக்னிக்: உங்க வீட்டுல ட்ரை பண்ணுங்க!
வீட்டில் இருந்து ஈ, கொசுக்களை ஈசியாக விரட்ட சூப்பரான டிப்ஸை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் நம் வீட்டின் சுகாதாரத்தை நம்மால் உறுதிபடுத்த முடியும். இதனை பின்பற்றவும் எளிதாக இருக்கும்.
கிட்சனை பராமரிப்பதே பெரும் பணி. எவ்வளவு தான் கிட்சனை சுத்தமாக பராமரித்தாலும் ஈ, கொசுக்கள் போன்றவை வந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் ஈ, கொசுக்களை எப்படி எளிமையாக விரட்டுவது என காண்போம்.
Advertisment
ஒரு சிரட்டையை எடுத்து அதில் கொஞ்சமாக அடுப்புக் கரி, வேப்பிலை, ஓமவல்லி இலைகள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதன் பின்னர் அதில் கற்பூரம் சேர்த்து பற்ற வைக்க வேண்டும். இதனை கொசு, ஈக்கள் இருக்கும் இடங்களில் வைத்தால், அந்த தொல்லையே இல்லாமல் போய் விடும்.
ஈக்களை விரட்ட மற்றொரு சூப்பர் டிப்ஸும் இருக்கிறது. ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அளவு கல் உப்பு, அரை ஸ்பூன் பேக்கிங் சோடா, இரண்டு கற்பூரம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதில் கற்பூரத்தை பொடியாக்கி சேர்க்க வேண்டும். மேலும், டெட்டால், லைசால் மற்றும் தண்ணீர் ஆகியவற்றையும் தேவைக்கேற்ப சேர்க்க வேண்டும்.
இவை அனைத்தையும் நன்றாக கரைத்து, அரை பக்கெட் தண்ணீரில் ஊற்ற வேண்டும். இந்த தண்ணீரை வீடும் முழுவதும் தேய்த்து விட வேண்டும். இப்படி செய்தால் ஈக்கள் தொல்லையும் இருக்காது, வீடும் நறுமணமாக இருக்கும். இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி நம் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நம்மால் வைத்திருக்க முடியும்.