பூக்கள் கட்ட தெரியாதவர்கள் அல்லது புதிதாக பூக்கள் கட்டி பழகுபவர்கள் இந்த எளிமையான டிப்ஸை பின்பற்றலாம். இதற்கு ஒரு உருளை கிழங்கு இருந்தால் போதுமானது.
இதற்காக முதலில் பூக்களை வழக்கமாக நூலில் கட்டுவதை போன்று அடுக்கி கட்டலாம். ஆனால், அவற்றை நெருக்கமாக கட்ட முயற்சிக்க வேண்டாம். சற்று இடைவேளி விட்டு கட்ட வேண்டும். இப்போது தேவையான அளவு பூக்களை கட்டியதும், அவற்றை தனித்தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது, ஒரு பெரிய ஊசியை எடுத்து அதற்குள் நூலை கோர்த்துக் கொள்ளலாம். இந்த நூலின் நுனிப்பகுதியில் இறுக்கமாக மூன்று முடிச்சிகள் போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது, ஊசி நூலை எடுத்து உருளைக் கிழங்கின் மீது குத்திக் வைக்கலாம்.
இதைத் தொடர்ந்து, தனித்தனி பாகங்களாக வெட்டி எடுத்துக் கொண்ட பூக்களை இந்த ஊசியின் மீது நெருக்கமாக வைக்கவும். ஏற்கனவே, கட்டப்பட்டிருக்கும் பூக்களின் நடுப்பகுதில் ஊசியை நுழைத்திருப்பதால் பூக்கள் பார்ப்பதற்கு நெருக்கமாக தெரியும்.
இவ்வாறு அனைத்து பூக்களையும் ஊசியில் கோர்த்த பின்னர், ஊசியை தனியாக உருவிக் கொள்ளலாம். இறுதியாக நூலின் மறு நுனிக்கும் இறுக்கமாக முடிச்சி போட்டு விடலாம்.
இப்படி செய்வதன் மூலம் பூக்களை நெருக்கமாக கட்ட முடியும். பூக்களும் பார்ப்பதற்கு அழகாக காட்சியளுக்கும்.