மிகச் சிறிய அளவில் இருந்து சேமிப்பது தான் அதிகப்படியான லாபத்தை கொடுக்கும். எனவே, சேமிப்பை தொடங்குவதற்கு முன்பு நமக்கான செலவுகள் என்ன என்பதை ஆராய்ந்து கொள்வது அவசியம்.
அதன்படி, ஒவ்வொரு நாளும் நாம் செலவு செய்வதை கணக்கிட வேண்டும். இதன் மூலம் தேவையில்லாமல் நாம் செய்யும் செலவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம். இதேபோல், எந்த செலவை குறைக்கும் போது சேமிப்பு அதிகமாகும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் என பண்டிகைக்கு பஞ்சமே இல்லாத நாடு இந்தியா. இந்த நேரத்தில் நமக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அன்பளிப்பு வழங்குவார்கள். இதனை அவர்களிடம் பணமாக கேட்டு பெற்றுக் கொள்ளலாம். இந்த பணத்தையும் சேமித்து வைக்கலாம்.
மூன்றாவதாக, வருடத்தில் குறைந்தது ஒரு மாதமாவது அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற கேளிக்கை அம்சங்களில் பணத்தை செலவிடாமல் இருக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலமும் நம்மால் அதிகமாக பணம் சேமிக்க முடியும்.
நம்மால் அடைய முடியும் என்ற நம்பிக்கையை ஒரு குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு வரும் ஆண்டில் ரூ. 1 லட்சம் அல்லது ரூ. 50 ஆயிரம் சேமிக்க முடியும் என நிர்ணயித்துக் கொள்ளலாம். இதனை நம்மால் செய்து முடிக்க முடியுமா என சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
முதன்மையாக நமக்கு கிடைக்கும் வருமானத்தை கடந்து, இரண்டாவதாக மற்றொரு வருமானம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, சுயதொழில் அல்லது நமக்கு தெரிந்த ஏதேனும் ஒரு விஷயம் மூலமாக வருவாய் ஈட்ட முயற்சி செய்யலாம்.
இவ்வாறு சேமிக்கப்படும் பணத்தை தனியாக ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் முதலீடு செய்ய வேண்டும்.
சேமிப்பில் பொறுமை மிக அவசியம். எனவே, எந்தவொரு சூழலிலும் பொறுமையை இழக்காமல், தொய்வடையாமல் தன்னம்பிக்கையுடன் பணத்தை சேமிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“