வீட்டை சுத்தப்படுத்துவதில் மிக முக்கிய வேலையாக இருப்பது பாத்ரூம் தான். பாத்ரூம் எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நமது உடல் நலமும் பாதுகாப்பாக இருக்கும். அதனடிப்படையில் பாத்ரூமை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என இப்பதிவில் பார்க்கலாம்.
ஒரு சிறிய தட்டில் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்டை கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மீது அரை எலுமிச்சை சாறு பிழிந்து விட வேண்டும். இத்துடன் அரை ஸ்பூன் சோடா உப்பு சேர்க்க வேண்டும். இவற்றை நன்றாக கலக்க வேண்டும். இந்தக் கலவையை கொண்டு பாத்ரூம் பைப்களை ஈசியாக சுத்தம் செய்யலாம்.
மற்றொரு தட்டை எடுத்து அதில் கோலமாவு சேர்க்க வேண்டும். இதனுடன் மூன்று ஸ்பூன் சோடா உப்பு சேர்க்க வேண்டும். அதே அளவிற்கு ஒரு ஸ்பூன் துணி துவைக்க பயன்படும் பௌடர் சேர்க்க வேண்டும். இவற்றையும் சேர்த்து கலக்க வேண்டும். இந்த பௌடரை பாத்ரூமில் நன்றாக தேய்த்து கழுவினால், பளிச்சென சுத்தமாக மாறிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“