/indian-express-tamil/media/media_files/2025/05/12/aY1IeHoViQwPtj9rZp6c.jpg)
நம் வீட்டில் விலை அதிகமாக செலவு செய்து வாங்கிய பொருட்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால், நிச்சயம் அதில் மெத்தை மற்றும் சோஃபா இடம்பெறும். ஆனால், இவ்வளவு செலவு செய்து வாங்கிய இந்த பொருட்களை நம்மால் எளிதாக சுத்தம் செய்ய முடியாது.
குறிப்பாக, வாக்யூம் க்ளீனர் இருந்தால் மெத்தையை எளிதாக சுத்தம் செய்யலாம். ஆனால், எல்லோரது வீடுகளிலும் வாக்யூம் க்ளீனர் இருக்கும் என்று கூற முடியாது. அந்த வகையில் மெத்தை மற்றும் சோஃபாவை எளிதாக சுத்தம் செய்வதற்கான ஒரு சிம்பிள் டெக்னிக்கை இதில் பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். இந்த தண்ணீர் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இதையடுத்து, இரண்டு மூடி அளவிற்கு வினிகர், கால் ஸ்பூன் ஷாம்பூ, இரண்டு கற்பூரம் ஆகியவற்றை சுடுதண்ணீரில் கலக்க வேண்டும்.
இந்த தண்ணீரில் ஒரு சுத்தமான துணியை நனைத்து, நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளலாம். இப்போது, வீட்டில் இருக்கும் குக்கரின் மூடியை எடுத்து, அதில் இந்த துணியை சுற்றி கட்டிக் கொள்ள வேண்டும்.
இனி, ஈரத்துணி சுற்றி இருக்கும் குக்கர் மூடியை கொண்டு மெத்தையின் மீது துடைத்து எடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மெத்தையில் இருக்கும் அழுக்குகள் முற்றிலும் நீங்கி, சுத்தமாக மாறி புதியது போன்று காட்சியளிக்கும்.
இதே முறையை பின்பற்றி வீட்டில் இருக்கும் சோஃபாவையும் சுத்தப்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் வாக்யூம் க்ளீனர் இல்லாத வீடுகளில் மெத்தை மற்றும் சோஃபாவை எளிதாக சுத்தப்படுத்த முடியும்.
நன்றி - Nalini Manick Cooking Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.