தோசைக் கல் ஓரத்தில் மாவு பிசுக்கு இருக்கா? கொஞ்சம் உப்பு, ஒரு எலுமிச்சை போதும்; ஈஸியா கிளீன் பண்ணலாம்!

தோசைக் கல்லின் ஓரத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்கை எளிதாக அகற்றுவது எப்படி என்று இந்தக் குறிப்பில் காணலாம். இதற்காக, எலுமிச்சை, உப்பு போன்ற பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானதாக இருக்கும்.

தோசைக் கல்லின் ஓரத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்கை எளிதாக அகற்றுவது எப்படி என்று இந்தக் குறிப்பில் காணலாம். இதற்காக, எலுமிச்சை, உப்பு போன்ற பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானதாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Dosa Tawa cleaning

நம் வீட்டில் இருக்கும் தோசைக் கல்லை தினசரி கழுவி சுத்தமாக பராமரித்தாலும், அதன் ஓரத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகளை மட்டும் அகற்றுவது சிரமமாக இருக்கும். நாமும் விலை அதிகமான சோப்பு வாங்கி பயன்படுத்தினாலும் கூட இதனை போக்குவது அவ்வளவு எளிதல்ல.

Advertisment

அந்த வகையில் வீட்டில் இருக்கும் சில சிம்பிளான பொருட்களை பயன்படுத்தி தோசைக் கல்லின் ஓரத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்கை எவ்வாறு அகற்றலாம் என்று பார்க்கலாம். இதற்காக, முதலில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும்

சூடாக இருக்கும் தோசைக் கல்லின் மீது இரண்டு ஸ்பூன் உப்பை தூவி விட வேண்டும். இப்போது, எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி, அதனை ஃபோர்க்கில் குத்தி தோசைக் கல்லில் வைத்து தேய்க்க வேண்டும். இப்படி தேய்க்கும் போது அடுப்பை ஆன் செய்திருக்க வேண்டும்.

இப்படி செய்யும் போது தோசைக் கல்லின் ஓரங்களில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு ஓரளவிற்கு வந்து விடும். இவ்வாறு இரண்டு நிமிடங்களுக்கு தேய்த்த பின்னர், ஒரு துணி கொண்டு தோசைக் கல்லை சுத்தப்படுத்த வேண்டும். அடுத்ததாக மீதமிருக்கும் எலுமிச்சை பழத்தின் சாறை, தோசைக் கல் மீது பிழிந்து விட வேண்டும்.

Advertisment
Advertisements

இதையடுத்து, மேலும் இரண்டு ஸ்பூன் உப்பை தோசைக் கல் மீது தூவி தேய்க்க வேண்டும். இதன் பின்னர், தோசைக் கரண்டி அல்லது கத்தி போன்ற கூர்மையான பொருளை கொண்டு தோசைக் கல்லின் ஓரத்தில் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் படிந்து இருக்கும் எண்ணெய் பிசுக்கிகள் நீங்கும்.

இறுதியாக, இரண்டு ஸ்பூன் எண்ணெய்யை தோசைக் கல் மீது ஊற்ற வேண்டும். ஒரு வெங்காயத்தை தோசைக் கல் மீது வைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இப்படி இரண்டு நிமிடங்களுக்கு செய்தால், தோசைக் கல் பார்ப்பதற்கு புதிது போன்று மாறி விடும்.

இவ்வாறு செய்த பின்னர் தோசைக் கல்லை கழுவ வேண்டும் என்ற தேவையும் கிடையாது. நேரடியாக தோசையை ஊற்றலாம். எண்ணெய் பிசுக்குகள் முற்றிலுமாக நீங்கியதால், தோசையும் பிய்ந்து போகாமல் வரும். இந்த சிம்பிளான டிப்ஸை உங்கள் வீட்டில் செய்து பார்க்கலாம்.

நன்றி - மகிழ்மனை Youtube Channel

Kitchen Hacks In Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: