ஒரு பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கொண்டு வீட்டில் இருக்கும் மின்விசிறியை எப்படி எளிமையாக சுத்தப்படுத்துவது என தற்போது பார்க்கலாம். நாம் பயன்படுத்திய ஒரு லிட்டர் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் அல்லது ஜூஸ் பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதன் நெருப்பில், பிளாஸ்டிக் பாட்டிலின் மேல் பகுதியை காண்பிக்க வேண்டும்.
நெருப்பில் காட்டிய பிளாஸ்டிக் பாட்டிலின் மேல் பகுதியை சரிவாக வளைத்துக் கொள்ள வேண்டும். இப்போது, பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியையும் நெருப்பில் காண்பித்து, அதனை லேசாக அழுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் பார்ப்பதற்கு L வடிவத்தில் இருக்கும்.
இப்போது நாம் பயன்படுத்தாத பழைய துணி ஒன்றை எடுத்து, அதை தோரணம் போன்று வெட்டிக் கொள்ள வேண்டும். இதையடுத்து ஃபெவிக்விக் எடுத்து பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியில் தேய்த்து, அதைச் சுற்றி தோரணம் போன்று வெட்டி எடுத்த துணியை ஒட்ட வேண்டும். இதைப் பார்ப்பதற்கு மாப் போன்று காட்சியளிக்கும்.
இறுதியாக பாட்டிலின் வாய் பகுதியில், பழைய மாப் குச்சி அல்லது மூங்கில் குச்சியை மாட்டி வைக்க வேண்டும். இதைக் கொண்டு வீட்டில் இருக்கும் மின்விசிறியை சுலபமாக சுத்தம் செய்யலாம். இது L வடிவத்தில் இருப்பதால், சுத்தப்படுத்துவது எளிதாக இருக்கும்.