Advertisment

ஃப்ரீசர்ல ஐஸ் கட்டியா இருக்குதா? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!

ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் ஐஸ் கெட்டியாக இருந்தால் அவற்றை சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். இதனை எவ்வாறு அகற்றலாம் என இதில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Freezer

வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் பல நேரங்களில் ஐஸ் கெட்டியாக இருக்கும். இதனால் ஃப்ரீசரில் மற்ற பொருள்களை வைப்பதற்கும், ஃப்ரீசரை சுத்தப்படுத்தவும் கடினமாக இருக்கும். இதற்கான தீர்வு குறித்து தற்போது பார்க்கலாம்.

Advertisment

முதலில் ஃப்ரிட்ஜை சுத்தப்படுத்துவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக ஆஃப் செய்துவிட வேண்டும். இதனால் கெட்டியாக படிந்துள்ள ஐஸ் கட்டிகளை கைகளால் அகற்ற முடியும். கூர்மையான பொருள்களைக் கொண்டு ஐஸ் கட்டிகளை அகற்ற முயற்சிக்க வேண்டாம். இவை ஃப்ரிட்ஜை சேதப்படுத்த வாய்ப்புள்ளது.

இப்படி ஐஸ் கட்டிகளை அகற்றிய பின்னர், ஒரு துணி எடுத்து ஃப்ரீசரை துடைக்க வேண்டும். இப்போதும் ஃபிர்ட்ஜ் ஆஃப் செய்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பின்னர், ஒரு துணியில் தூள் உப்பு போட்டு, அதை கொண்டு ஃப்ரீசரை மீண்டும் துடைக்க வேண்டும்.

பின்னர், ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக கல் உப்பு போட்டு ஃப்ரீசரின் ஓரத்தில் வைத்து விடவும். இவை, ஐஸ் கட்டிகள் அதிகளவு உருவாவதை தடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்தால் ஃப்ரீசரை எளிமையாக சுத்தப்படுத்தி விடலாம்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ways to remove fridge smells naturally
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment