கிட்சனை சுத்தப்படுத்துவது என்பது பெரும் சவாலான காரியம். குறிப்பாக கேஸ் அடுப்பை சுத்தப்படுத்துவது சற்றே கடினமானதாக இருக்கும். சிலர் கேஸ் அடுப்பை சுத்தம் செய்வதற்கு தனியாக துணிகளை வாங்குவார்கள். மேலும், சில லிக்கியூட்களையும் பணம் செலவு செய்து கடைகளில் இருந்து வாங்குவார்கள்.
அப்படி எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் கேஸ் அடுப்பை சுத்தம் செய்யலாம். இதற்காக நம்மிடம் சிறிய துண்டு பழைய செய்தித் தாள் இருந்தாலே போதும். முதலில் கேஸ் அடுப்பின் மீது கால் கிளாஸ் அளவிற்கு சற்று வெதுவெதுப்பான நீரை தெளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், பழைய செய்தித் தாளை சிறிய துண்டாக கிழித்து கேஸ் அடுப்பை சுற்றி துடைக்கலாம். இதன் மூலம் அடுப்பு எளிதாக சுத்தமாகும்.
இதேபோல், மீண்டும் ஒரு முறை மற்றொரு துண்டு செய்தித் தாளை கிழித்து அடுப்பை துடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கேஸ் அடுப்பு பளபளப்பாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“