நம் வீட்டு பராமரிப்பு மற்றும் கிட்சன் பராமரிப்பில் தினசரி பின்பற்றக் கூடிய சில எளிமையான டிப்ஸை தற்போது பார்க்கலாம். இவை நம் பணியை சீராக மாற்றுவதற்கு உதவி செய்கின்றன.
Advertisment
நாம் தினசரி பயன்படுத்தக் கூடிய தங்க நகைகள் சீக்கிரமாகவே அழுக்காகி அதன் நிறம் மங்கலாக காட்சியளிக்கும். இதனை பாலிஷ் செய்ய வேண்டுமென்றால் கடைக்கு கொண்டு செல்வோம். ஆனால், இந்த ட்ரிக்கை ஃபாலோ செய்தால் வீட்டில் வைத்தே நம் நகையை சுத்தப்படுத்தலாம்.
இதற்காக, ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து அதில் சூடுதண்ணீர் ஊற்ற வேண்டும். இதில் சுத்தப்படுத்த வேண்டிய நகையை போட்டு விட்டு அத்துடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், சோப்புத் தூள் ஆகிய இரண்டையும் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரில், நகையை சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
இதன் பின்னர், நகையை எடுத்து ஷாம்பூ சேர்த்து நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இதையடுத்து, சாசாரண தண்ணீரில் நகையை ஒரு முறை கழுவி எடுத்தால், பார்ப்பதற்கு புதியது போன்று மாறிவிடும். குறிப்பாக, விழாக்களில் பங்கேற்பதற்கு முந்தைய நாள் இரவு, நகையை இவ்வாறு சுத்தப்படுத்து அணியலாம்.
Advertisment
Advertisements
இதேபோல், வீட்டில் இருக்கும் ஊக்குகள், ஊசிகள் போன்றவற்றையும் துருபிடிக்காமல் பராமரிக்க முடியும். அதன்படி, ஊக்குகளை எடுத்து ஒரு சிறிய டப்பாவில் போட்ட பின்னர், அவற்றின் மீது முகத்திற்கு பூசக்கூடிய பௌடரை சிறிதளவு தூவி விட வேண்டும். இப்படி செய்தால் ஒரு ஆண்டு வரை ஊக்குகள் துருபிடிக்காமல் இருக்கும்.
சமையலுக்காக நிறைய அப்பளங்களை கிட்சனில் வாங்கி வைத்திருப்போம். ஆனால், சில நாட்களில் அவை பதத்து விடும். இதனால், அப்பளத்தின் சுவையும் மாறுபடும். இதை தடுக்க தேவையான அப்பளங்களை எடுத்த பின்னர், மீதி இருக்கும் அப்பளங்களை அரிசி டப்பாவிற்குள் வைத்து விடலாம். இப்படி அரிசியில் வைக்கும் அப்பளங்கள் சுமார் ஒரு மாதம் வரை பதத்துப் போகாமல் இருக்கும்.