பல வருட அழுக்கு சோபா பளிச்சென மாறும்… இதை டிரை பண்ணுங்க!
வீட்டில் கறையாக இருக்கும் சோஃபாவை எப்படி எளிதாக சுத்தம் செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக வக்கும் க்ளீனர் போன்ற பொருட்கள் தேவைப்படாது.
வீட்டில் கறையாக இருக்கும் சோஃபாவை எப்படி எளிதாக சுத்தம் செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக வக்கும் க்ளீனர் போன்ற பொருட்கள் தேவைப்படாது.
நம்முடைய வீட்டில் விலை அதிகமாக கொடுத்து வாங்கிய பொருட்களை பட்டியலிட்டால், சோஃபாவும் இடம் பெறும். ஆனால், இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய சோஃபாவை அடிக்கடி சுத்தம் செய்திருக்க மாட்டோம்.
Advertisment
தினசரி அதிகமாக சோஃபாவை பயன்படுத்துவதால் அவற்றில் எளிதாக அழுக்கு மற்றும் கறைகள் ஒட்டிக் கொள்ளும். இதனை சுத்தம் செய்யாமல் இருந்தால் ஏதாவது தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.
அதன்படி, வக்கும் க்ளீனர் போன்ற பொருட்கள் இல்லாமல், சோஃபாவை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை சுலபமாக நம்மால் செய்து முடிக்க முடியும்.
இதற்காக, ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் துணி துவைக்க பயன்படும் சோப்பு லிக்குவிடை ஒரு மூடி கலந்து கொள்ளலாம்.மேலும், சிறிதளவு வினிகரையும் இதில் கலக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இந்த நீரில் ஒரு துண்டை நனைத்து சற்று பிழிந்து கொள்ளலாம். இனி, இந்த துண்டை விரித்து அதில் குக்கர் மூடியை வைத்து சுற்றி மேற்பகுதியில் ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளலாம். இப்படி செய்தால் சோஃபாவை சுத்தம் செய்ய எளிதாக இருக்கும்.
இப்போது, அழுக்கான சோஃபா மீது சோடா உப்பை சிறிது தூவிக் கொள்ள வேண்டும். இறுதியாக ரப்பர் பேண்ட் போட்டு வைத்திருக்கும் துண்டை வைத்து சோஃபாவை துடைக்கலாம். இப்படி துடைத்தால் சோஃபாவை எளிதாக சுத்தப்படுத்தி விடலாம்.