நம் வீடுகளில் எவ்வளவு தான் சேலையை மடித்து வைத்தாலும், துணிக் கடைகளில் இருப்பதை போன்று சீராக இல்லையே என நாம் கருதுவது உண்டு. ஒரு சீப்பு இருந்தாலே போதும், நாமும் சேலையை சுலபமாக மடித்து விடலாம்.
ஒரு சீப்பை எடுத்து சேலையின் நுனிப்பகுதியில் வைத்து, உட்புறமாக சேலையை மடிக்க தொடங்க வேண்டும். அப்போது, கீழ்ப்புறங்களில் ஏற்படும் சிறிய சுருக்கங்களை மெலிதாக உதறி விட்டாலே போதும். இவ்வாறு சேலையை முழுவதுமாக மடித்த பின்னர், அதில் இருக்கும் சீப்பை வெளியே எடுத்து விட வேண்டும். அதன் பின்னர், சேலையை நான்கு மடிப்புகளாக மடிக்க வேண்டும். இப்படி செய்தால் துணிக் கடைகளில் இருப்பதை போன்று சுருக்கங்கள் இல்லாமல் சேலையை எளிதாக மடிக்கலாம்.
இதேபோல், துவைத்த பின்னர் துணிகளை கொடிகளில் காய்வதற்காக போடும் போது அதன் மீது க்ளிப் கொண்டு மாட்டி விடுவோம். இந்த க்ளிப்கள் பெரும்பாலான நேரத்தில் லூசாக இருப்பதால், துணிகள் சுருங்கிக் கொண்டு காய்வதற்கு நேரமாகும். அப்போது, க்ளிப்புக்கு பதிலாக ஹேர்பின் கொண்டு துணிகளை கொடியில் மாட்ட வேண்டும். இந்த ஹேர்பின்கள் துணிகளை இறுக்கமாக பற்றிக் கொள்வதால் சுருக்கங்கள் ஏற்படாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“