/indian-express-tamil/media/media_files/2025/02/16/IJKkqA8yGXAvGbMzh1qy.jpg)
வீட்டில் எலி இருந்தால் அதுவே பெரும் பிரச்சனையாக மாறிவிடும். வாஷிங் மிஷின், ஃப்ரிட்ஜ், புத்தகங்கள் மற்றும் துணிகளை எலிகள் கடித்து சேதப்படுத்தும். இவை மட்டுமல்லாமல் உணவு பொருட்களும் எலிகளால் பாதிக்கப்படுகின்றன. இதனால் வீட்டில் இருப்பவர்கள் நோய்வாய்ப்படுவதுவற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதனை தடுக்கும் வகையில் வீட்டில் இருந்து எலிகளை ஒரே நாளில் விரட்டி விட முடியும். இதற்காக மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது. ஒரு பழுத்த தக்காளியை பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த தக்காளி பழத்தின் மீது தனி மிளகாய் துள் சேர்த்து நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தடவியதும் அதற்கு மேல் நாட்டுச் சர்க்கரை கொண்டு தேய்க்க வேண்டும்.
இந்த தக்காளியை வீட்டில் எலி இருக்கும் இடங்களில் வைத்து விடலாம். குறிப்பாக, அடுப்பின் அடிப்பகுதி, துணி இருக்கும் பகுதிகள், ஜன்னல் ஓரங்கள் என அனைத்து இடங்களிலும் வைக்கலாம்.
இதனை எலிகள் சாப்பிடுவதால் அவற்றுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் இருக்கும் எலிகள் வெளியே சென்று விடுகின்றன. எலிகளுக்கு புத்திக்கூர்மை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் இதே வீட்டிற்கு எலிகள் வருவதில்லை.
நன்றி - Eva Samayal Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.