தக்காளிகளை சுலபமாக வீட்டின் மாடித்தோட்டத்தில் இருந்து அறுவடை செய்வது எப்படி என தற்போது பார்க்கலாம். தக்காளி விதைகளை தனியாக பிரித்து எடுத்து காய வைக்க வேண்டும். சிறிய பிளாஸ்டிக் கப்பில் மணல் நிரப்பி அதில் தக்காளி விதைகளை விதைக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் தெளித்தால் 10 நாள்களில் இலைகள் துளிர் விட தொடங்கும்.
பின்னர், ஒரு பிளாஸ்டிக் வாளியை எடுத்து கீழ்ப்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் துவாரமிட வேண்டும். இதையடுத்து, பிளாஸ்டிக் கப்பில் வளர்ந்த செடிகளை வாளியின் பக்கவாட்டில் வைக்க வேண்டும்.
வாளியின் நடுவே பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து புதைத்து விட வேண்டும். இதற்கு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிய பின்னர் ஏழு நாள்களில் செடிகள் பெரிதாக வளரத் தொடங்கும். பின்னர், வாழைப்பழ தோலை ஊற வைத்து பிளாஸ்டிக் பாட்டிலின் உள்ளே உரமாக வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால், 20 நாள்களில் பூக்கத் தொடங்கி, 40 நாள்களில் காய்கள் வரும். அதன்பின்னர், 60 நாள்களில் பழுத்த தக்காளிகளை அறுவடை செய்து விடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“