Advertisment

முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்...

முடி உதிர்வு பிரச்சனைகள் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில எளிய வழிமுறைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றுவதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையை நாம் போக்கலாம்.

author-image
WebDesk
New Update
Hairloss

முடி உதிர்வு பிரச்சனை என்பது தற்போது பலருக்கும் உள்ளது. உடல் நிலையில் மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் என பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம். எனினும், பலருக்கு பொடுகு பிரச்சனை இருப்பதால் முடி உதிர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முடி உதிர்வு பிரச்சனையை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து இதில் காணலாம்.

Advertisment

உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் இதனை சீரமைக்க முடியும். சத்தான புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இவை முடிக்கு மட்டுமல்லாமல் உடலுக்கு வலு சேர்ப்பவை. மேலும், வால்நட், மீன், முட்டை போன்றவற்றை நம் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் உள்ளது. இவை நமக்கு தேவையான சத்துகளை வழங்கும். முடி உதிர்வு பிரச்சனைகளும் குறையும்.

அதிக வறட்சி தன்மையால் பொடுகு தொல்லை உருவாகும். எனவே, உடலைக் கூடுமானவரை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்கு முதலில், நாள் ஒன்றுக்கு தேவையான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால், உடலில் நீர்ச்சத்து எப்போதும் இருக்கும். மேலும், சில நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களையும் நாம் சாப்பிடலாம்.

சிலர், இரவு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அப்படி செய்வது தவறு என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக எண்ணெய் தேய்த்து விட்டு, பின்னர் குளிக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Advertisment
Advertisement

இதேபோல், சில ஹேர் பேக்குகள் பயன்படுத்தலாம். இரசாயனங்கள் கலக்காத ஹேர் பேக்குகளை நாமே உருவாக்க முடியும். நம் தலை முடிக்கு தேவையான அளவு வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை இதனை நன்றாக அரைத்து தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம்.

மேலும், இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து குளிக்கலாம். இவற்றை தலையில் தேய்த்த பின்னர் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். இது போன்று செய்து வந்தால் தலை முடி உதிர்வு பிரச்சனைகள் குறையத் தொடங்கும்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Basic tips to stop hair fall
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment