காய்ந்த பூக்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு நம் வீட்டிலேயே கம்ப்யூட்டர் சாம்பிராணி செய்யலாம். இதற்கான செய்முறை குறித்து தற்போது பார்க்கலாம்.
பூஜைக்காக பயன்படுத்திய மலர்களை காய வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் சாமந்தி மலர் எடுத்தால், இரண்டு கப் பன்னீர் ரோஜா எடுத்துக் கொள்ளலாம். இதேபோல், இரண்டு ஆரஞ்சு பழங்களின் தோலை வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
மேலும், 5 ஏலக்காய், 5 கிராம்பு, 5 பிரியாணி இலைகள், 5 கற்பூரம், 2 ஸ்பூன் சாம்பிராணி தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். முதலில், காய்ந்த மலர்களை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர், மற்ற பொருள்களையும் இத்துடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
பின்னர், இதில் 2 ஸ்பூன் பன்னீர் தெளித்து கலக்கவும். இறுதியாக, கட்டைப்பையில் இருக்கும் குச்சியை எடுத்து சிறிய துண்டாக வெட்டிக் கொள்ளவும். அதில், அரைத்து எடுத்த சாம்பிராணி பொருள்களை திணித்து மறு புறம் வழியாக எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சாம்பிராணி வடிவம் கிடைத்துவிடும். இதை நன்றாக 2 நாள்கள் வெயிலில் காயவைத்து எடுத்தால் கம்ப்யூட்டர் சாம்பிராணி ரெடியாகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“