சாயம் ஒட்டிய துணி சில நிமிடங்களில் பளிச்: எந்த கெமிக்கலும் இல்லாத ஈசி டெக்னிக்!
வெள்ளைத் துணியில் ஒட்டியிருக்கும் சாயத்தை சுலபமாக அகற்றும் முறை குறித்து இதில் பார்க்கலாம். இதனை பின்பற்றுவதன் மூலம் நம் துணிகளை மீண்டும் புதியது போன்று மாற்றிவிட முடியும்.
நாம் ஆசையாக வாங்கிய துணிகளில் சில நேரம் சாயம் மற்றும் கறை ஆகியவை ஏற்பட்டு விடும். அந்த நேரத்தில் பின்பற்ற வேண்டிய எளிமையான வழிமுறைகளை காண்போம்.
Advertisment
சில நேரத்தில் பட்டுப்புடவைகளில் எண்ணெய் கறை பட்டால் அவை எளிதாக போகாது. இதனை தலைவலி தைலம் கொண்டு சுலபமாக நீக்க முடியும். அதன்படி, துணியில் எண்ணெய் பட்ட இடத்தில், தலைவலி தைலம் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். இதையடுத்து துணியை தண்ணீரில் துவைத்து எடுத்தால் எண்ணெய் இருந்த கறை நீங்கி விடும்.
இப்போது வெள்ளைத் துணியில் ஒட்டிக் கொண்ட சாயத்தை எப்படி போக்குவது என பார்க்கலாம். ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து, அது முழுவதும் தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். இப்போது, சாயம் பட்ட துணியை அந்த பாத்திரத்திற்குள் போட வேண்டும். இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். சுமார் 2 முதல் 5 நிமிடங்கள் வரை இப்படி கொதிக்க வைக்க வேண்டும்.
இப்போது, அந்த துணியை மட்டும் எடுத்து சாதாரண குளிர்ந்த நீரில் போட வேண்டும். இதை நன்றாக பிழிந்து எடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும். இப்படி 3 அல்லது 4 முறை செய்தால், துணியில் இருக்கும் சாயம் நீங்கி விடும்.
Advertisment
Advertisement
நம் துணிகளில் பபுள்கம் ஒட்டிக் கொண்டால் அதனை சுத்தப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், இதனை எளிமையாக அகற்ற முடியும். துணியில் பபுள்கம் ஒட்டி இருப்பதற்கு பின்புறத்தில், ஒரு ஐஸ் கட்டி வைத்து அழுத்தி தேய்க்க வேண்டும்.அதன் பின்னர், ஐஸ் கட்டியை எடுத்து பபுள்கம் கறையின் மேல் வைத்து தேய்க்க வேண்டும். இப்படி தொடர்ந்து தேய்த்தால் பபுள்கம் கறை நீங்கி விடும்.
இதேபோல், வெள்ளைத் துணிகளில் சில சமயங்களில் மஞ்சள் கறை ஏற்பட்டு விடும். இதனை எளிமையாக போக்கி விடலாம். மஞ்சள் கறையின் மீது சிறிதளவு ஹார்பிக் ஊற்றிக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு பிரஷ் எடுத்து, கறையின் மீது ஊற்றி இருக்கும் ஹார்பிக்கை நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி தேய்த்த பின்னர், தண்ணீரில் கழுவி எடுத்தால் மஞ்சள் கறை இருந்த தடம் தெரியாமல் போய்விடும்.