வாஷிங் மெஷின்ல துவைச்ச துணியை இனி அயர்ன் பண்ணவே வேண்டாம்: ஜவ்வரிசியை வைத்து செம்ம டிரிக்
அயர்ன் செய்யாமல் காட்டன் துணிகளில் இருந்து சுருக்கங்களை எப்படி போக்குவது என இதில் பார்ப்போம். இதற்காக ஜவ்வரிசியும், தண்ணீரும் இருந்தாலே போதுமானது. மிக எளிமையாக செய்யலாம்.
காட்டன் துணிகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தும் போது, அவற்றில் நிறைய சுருக்கங்கள் ஏற்படும். அதன்படி, துணி துவைத்த உடன் இந்த ஒரு டிப்ஸை ஃபாலோ செய்தால் அயர்ன் செய்யாமலே துணி பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.
Advertisment
ஒரு ஸ்பூன் அளவிற்கு மாவு ஜவ்வரிசி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். இதில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், தண்ணீரை வடிகட்டி விட்டு ஜவ்வரிசியை மிக்ஸில் போட்டு ஒரு முறை மட்டும் அரைக்க வேண்டும்.
இதையடுத்து, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் கொதிக்கும் போது அரைத்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை இதில் சேர்க்க வேண்டும். ஜவ்வரிசி கொதித்து வரும் போது, அதில் மேலும் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இவை கொதித்தது அடுப்பை ஆஃப் செய்து விட்டு, பாத்திரத்தில் ஒரு மூடி வைத்து 10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். இதற்கடுத்து, ஜவ்வரிசியை எடுத்து வடிகட்ட வேண்டும். மறுபுறம், ஒரு பக்கெட்டில் இரண்டு கிளாஸ் தண்ணீருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சிய ஜவ்வரிசியை சேர்த்து கலக்க வேண்டும். இப்போது, சுருக்கமாக இருக்கும் காட்டன் துணியை இந்த தண்ணீரில் போட்டு நனைக்க வேண்டும். இறுதியாக, நனைத்த சட்டையை ஹங்கரில் தொங்க விட வேண்டும்.
Advertisment
Advertisement
இப்படி செய்தால் அயர்ன் செய்யாமலே துணியில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி விடும். மேலும், துணியில் இருந்து சாயமும் போகாது.