நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என அனைத்து இடங்களிலும் மழைக் காலத்தில் கொசு தொல்லை அதிகமாக இருக்கும். இவை சுகாதாரத்திற்கு சீர்கேடு விளைவிப்பதுடன், டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்புகின்றன. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
கொசுவை தடுப்பதற்கு செயற்கையான பல திரவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இவை சுவாச பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக, ஆஸ்துமா நோயாளிகள் போன்றோர் இதனால் பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில், இயற்கையான முறையில் கொசுக்களை எப்படி கட்டுப்படுத்துவது எனப் பார்க்கலாம்.
முதலில் ஒரு மணல் தட்டு அல்லது ஸ்டீல் தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு கற்பூரத்தை கைகளால் நொறுக்கிப் போடுங்கள். மேலும், ஒரு சாம்பிராணியையும் இதில் கைகளால் நொறுக்கி போட்டுக் கொள்ளலாம். இவற்றுடன் இரண்டு பிரியாணி இலைகளை சேர்த்துக் கொள்ளவும். இதன் மீது ஒரு ஸ்பூன் வேப்பெண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர், மற்றொரு பிரியாணி இலை எடுத்து அதன் மீது வேப்பெண்ணெய் தடவ வேண்டும். இந்த பிரியாணி இலையை அந்த தட்டின் நடுப்பகுதியில் வைத்து நெருப்பு பற்ற வைக்க வேண்டும்.
இதன் புகையில் இருந்து வெளியாகும் மனம், கொசுக்களை விரட்டிவிடும். இந்த புகையை சுவாசித்தால் உடலுக்கும் தீங்கு ஏற்படாது. இதில், வேப்பிலையையும் மாற்றாக பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“