மாறி வரும் கால சூழலில் அனைத்து காரியங்களையும் எளிதாகவும், விரைவாகவும் முடிப்பதற்கு பல்வேறு வழிகளை நாம் தேடுகிறோம். இதற்கு சமையலும் விதிவிலக்கல்ல. அவ்வாறு சமையலில் அதிகளவில் பயன்படும் தேங்காயை எளிதாக துருவும் முறையை தற்போது காணலாம்
முதலில் தேங்காயை சுமார் 30 விநாடிகள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இல்லையெனில், பைப்பை திறந்து விட்டு தேங்காயை முழுவதுமாக கழுவ வேண்டும்.
அதன் பின்னர், தேங்காயை இரண்டாக உடைக்க வேண்டும். தேங்காய் கண் இருக்கும் அருகேயுள்ள கோட்டின் மீது அடித்தால் தேங்காயை உடைக்க எளிமையாக இருக்கும்.
இதையடுத்து, உடைத்த தேங்காயை இட்லி பாத்திரத்தில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இவ்வாறு வேக வைத்த தேங்காயை மெல்லிய கத்தி கொண்டு பிரித்தால், ஓட்டில் இருந்து தேங்காய் தனியாக வந்து விடும். மேலும், தேங்காய் மீது ஒட்டியிருக்கும் சிறிய ஓடுகளையும் ஈசியாக சீவி விடலாம்.
இதன் பின்னர், பிரித்து எடுத்த தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீர் சேர்க்காமல் மெதுவாக மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். அரைத்து எடுத்த தேங்காயை தனியாக பாத்திரத்தில் போட்டு கைகள் படாமல் ஸ்பூனில் எடுத்து பயன்படுத்தினால், சுமார் 1 வாரத்திற்கு தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“