அயர்ன் பாக்ஸை தூக்கி ஓரமா வையுங்க... பட்டுப் புடவை மடிக்க ஒரு பத்திரிகை இருந்தால் போதும்!
அயர்ன் பாக்ஸ் இல்லாமல் பட்டுப் புடவைக்கு எப்படி ப்ளீட் எடுத்து உடுத்துவது என இந்தப் பதிவில் பார்க்கலாம். இதற்காக பழைய திருமண பத்திரிகைகள் இருந்தால் போதுமானது.
பட்டுப் புடவைக்கு எப்படி முன்கூட்டியே ப்ளீட் எடுத்து உடுத்துவது என்பதற்கான சுலபமான டிப்ஸை தற்போது காணலாம்.
Advertisment
விசிட்டிங் கார்ட் போன்ற தடிமன் மற்றும் அளவில் 26 துண்டுகளாக சிறிய அட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அட்டைகளை சிறிது இடைவெளி விட்டு பெரிய சைஸ் செல்லோடேப்பில் ஒட்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் புடவைக்கு ப்ளீட்டிங் எடுக்கும் அட்டை தயாராகி விடும்.
இவ்வாறு சிறிய அட்டைகள் கிடைக்கவில்லை என்றால், வீட்டில் இருக்கும் பழைய திருமண பத்திரிகைகளை இதற்கு பயன்படுத்தலாம். அதன்படி, பழையை பத்திரிகையை 4 இன்ச் உயரம் மற்றும் 7 இன்ச் அகலத்தில் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம்.
இப்போது, பட்டுப் புடவையை எடுத்து அதன் முந்தானை பகுதியை கட்டில் அல்லது மேஜை மீது விரித்து போட வேண்டும். முதலில் செய்து வைத்திருந்த ப்ளீட்டிங் அட்டையை முந்தானையின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியில் வைக்க வேண்டும். இதன் பின்னர், முந்தானையை அட்டை இருக்கும் திசை நோக்கி மடிப்பு எடுக்க வேண்டும். இப்படி செய்தால் பட்டு புடவைக்கு எளிதாக ப்ளீட் எடுத்து விடலாம். இதையடுத்து, முந்தானையின் அடிப்பகுதியில் ஊக்கு குத்தி விட வேண்டும்.
Advertisment
Advertisements
மேலும், புடவையின் முன்புறத்தை அயர்ன் பாக்ஸ் கொண்டு தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தலைமுடியை சீவ பயன்படுத்தப்படும் சீப்பைக் கொண்டு, இதனை தேய்க்க வேண்டும். இப்படி செய்தால், அயர்ன் செய்ததை போன்று மாறிவிடும். இதையடுத்து, புடவைக்கு தேவையான பகுதிகளில் ஊக்கு குத்தி வைத்து விடலாம். இப்படி செய்தால் பட்டுப் புடவையை அயர்ன் செய்யாமல் ஈசியாக கட்டிக் கொள்ளலாம்.