வெள்ளைச் சட்டையை பளிச் என்று சுத்தமாக துவைப்பதற்கான டிப்ஸை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது நம் சட்டையை புதியது போன்று மாற்றிவிடும். இதற்காக கல் உப்பு, எலுமிச்சை இருந்தால் போதும்.
பெரும்பாலும் அனைவரிடமும் வெள்ளைச் சட்டை இருக்கும். ஆசையாக வாங்கிய இந்த சட்டையை அடிக்கடி போடுவதை தவிர்த்து விடுவோம். வெள்ளை சட்டையில் அழுக்கு பட்டால், அவற்றை துவைப்பதற்கு சிரமமாக இருப்பதே அதன் காரணம். ஆனால், வெள்ளை சட்டையை எளிமையாக துவைப்பதற்கான சீக்ரெட்டை தற்போது பார்க்கலாம்.
Advertisment
முதலில் ஒரு பக்கெட் தண்ணீரில் வெள்ளைச் சட்டைக்கு தேவையான அளவு துணி துவைக்க பயன்படும் பொடியை போட வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் வாஷிங் சோடாவும் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு கைப்பிடி கல் உப்பும் சேர்த்து கலக்க வேண்டும்.
இவை அனைத்தையும் சேர்த்து கலக்கிய தண்ணீரில் வெள்ளை சட்டையை 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதையடுத்து, சட்டையை தண்ணீரில் இருந்து எடுத்து விடலாம். இப்போது சட்டையில் இருந்து அதிகப்படியான அழுக்கு நீங்கி இருக்கும். எனினும், அழுக்கு போகாமல் இருக்கும் இடங்களில் மட்டும் சிறிதளவு வாஷிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரஷ் வைத்து தேய்க்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் வெள்ளை சட்டை புதியது போன்று பளிச்சென மாறிவிடும். இந்த வழிமுறையை வெள்ளை சட்டையை துவைப்பதற்கு மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்ற நிற சட்டையை இப்படி துவைத்தால், அதில் இருக்கும் நிறம் மறைந்து விடும்.
Advertisment
Advertisement
மேலும், வெள்ளை சட்டையை மற்ற துணிகளுடன் சேர்த்து வாஷிங் மிஷினில் போட்டு துவைப்பதை கூடுமானவரை தவிர்த்து விட வேண்டும். இப்படி செய்தால் வெள்ளை சட்டையில் மற்ற துணிகளின் சாயம் பிடித்து விடும்.