இனி கை வலிக்க தேய்க்க வேணாம்... இந்தப் பொடி கொஞ்சம் தூவினால் பாத்ரூம் பளீச்: இப்படி ரெடி பண்ணுங்க!
நம் வீட்டின் கழிப்பறையை சுத்தமாக பராமரிக்கும் சிம்பிளான முறை குறித்து தற்போது காணலாம். இந்த டிப்ஸ்கள் அனைத்தும் நம் வேலையை எளிதாக மாற்ற உதவி செய்கின்றன.
நம் வீட்டின் கழிப்பறையை சுத்தமாக பராமரிக்கும் சிம்பிளான முறை குறித்து தற்போது காணலாம். இந்த டிப்ஸ்கள் அனைத்தும் நம் வேலையை எளிதாக மாற்ற உதவி செய்கின்றன.
வீட்டில் இருக்கும் கழிப்பறையை எவ்வளவு சுத்தமாக கழுவினாலும் சீக்கிரமாகவே அதில் உப்புக் கறை படிந்து விடும். அந்த வகையில், கழிப்பறையை எப்படி ஈசியாக சுத்தம் செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
Advertisment
ஒரு சிறய பாத்திரத்தில் முக்கால் பாக்கெட் கோலமாவு சேர்க்க வேண்டும். இத்துடன் கால் கப் அளவில் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்தப் பொடியை கொண்டு கழிப்பறையில் இருக்கும் டைல்ஸை சுத்தமாக கழுவி விடலாம்.
இப்போது, கழிவறையில் இருக்கும் பைப் உள்ளிட்டவற்றை சுத்தப்படுத்துவதற்கான பொருளை தயார் செய்யலாம். அதன்படி, பல் தேய்ப்பதற்கு பயன்படும் பேஸ்டை சிறிதளவு எடுத்து, அத்துடன் எலுமிச்சை சாறை பிழிந்து நன்றாக கலக்க வேண்டும். இதனைக் கொண்டு இரும்பு பைப்பை ஈசியாக க்ளீன் செய்ய முடியும்.
இதையடுத்து, நாம் முதலில் தயாரித்து வைத்திருந்த பொடியை, கழிப்பறையில் டைல்ஸ் முழுவதும் தூவி விட வேண்டும். குறிப்பாக, இந்தப் பொடியை தூவதற்கு முன்பாக டைல்ஸ்கள் அனைத்தும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். இதன் பின்னர், பொடியை துவியதும் 5 நிமிடங்களுக்கு அப்படியே ஊற விட வேண்டும்.
Advertisment
Advertisements
இதன் பின்னர், சிறிது தண்ணீர் தெளித்து துடைப்பம் கொண்டு டைல்ஸை சுத்தம் செய்யலாம். இந்தப் பொடியை பயன்படுத்தியதால், அதிக அழுத்தம் கொடுத்து தேய்த்து கழுவ வேண்டிய அவசியம் இருக்காது. லேசாக தேய்த்து கழுவினாலே அழுக்கு முற்றிலும் போய் விடும்.
இறுதியாக, பைப்பை சுத்தம் செய்ய தயாரித்து வைத்திருந்த பேஸ்ட் மூலம் அதனையும் க்ளீன் செய்யலாம். இப்படி செய்வதனால் உப்புக் கறை முற்றிலும் காணாமல் போய்விடும். கழிப்பறையும் பளிச்சென சுத்தமாகி விடும்.
இந்த எளிமையான டிப்ஸ்களை பின்பற்றி நம் வீட்டு கழிப்பறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நம்மால் பராமரிக்க முடியும்.