24 மணி நேரமும் ஏ. சி ஓட, கரண்ட் பில் கம்மியா வர... தேங்காய் சிரட்டையில் மண் நிரப்பி இப்படி யூஸ் செஞ்சு பாருங்க!
வீட்டில் ஏ.சி-யை அதிகமாக பயன்படுத்தினாலும் கரண்ட் பில்லை கம்மியாக கொண்டு வருவதற்கான சூப்பர் டிப்ஸை இந்தக் செய்தி குறிப்பில் பார்க்கலாம். இது நம் பணத்தை மிச்சப்படுத்த மிகவும் உதவிகரமாக அமைகிறது.
வீட்டில் ஏ.சி-யை அதிகமாக பயன்படுத்தினாலும் கரண்ட் பில்லை கம்மியாக கொண்டு வருவதற்கான சூப்பர் டிப்ஸை இந்தக் செய்தி குறிப்பில் பார்க்கலாம். இது நம் பணத்தை மிச்சப்படுத்த மிகவும் உதவிகரமாக அமைகிறது.
வெயிலின் தாக்கம் பல்வேறு பகுதிகளில் அதன் தீவிரத் தன்மையை காண்பிக்க தொடங்கி விட்டது. இதனால், வீட்டில் இருக்கும் போதே வெப்பம் அதிகரித்து இருக்கிறது. அதன்படி, இந்த சம்மர் சீசனை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பயனுள்ள டிப்ஸை இக்குறிப்பில் காணலாம்.
Advertisment
இன்றைய சூழலில் நிறைய பேர் வீட்டில் ஏ.சி இருக்கிறது. வெயில் காலத்தில் ஏ.சி-யை அதிகமாக பயன்படுத்துவதால் கரண்ட் பில் உயரும். ஆனால், சில சிம்பிள் டிப்ஸை பின்பற்றி கரண்ட் பில் உயர்வதை கட்டுப்படுத்த முடியும்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஏ.சி-யை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால், அதனை நன்றாக சர்வீஸ் செய்த பின்னர் தான் பயன்படுத்த வேண்டும். இது ஏ.சி-இன் திறனை மேம்படுத்த உதவியாக இருக்கும். ஏ.சி-யை சர்வீஸ் செய்தாலும், அதில் கருப்பு நிறத்தில் இருக்கும் ஃபில்டரை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
இது தவிர ஏ.சி-யின் டெம்பரச்சரை 26 அல்லது 27 என்ற அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் அறை மற்றும் நம் உடலுக்கு ஏற்ற குளிர்ச்சித் தன்மை கிடைக்கும். இதன் மூலமாகவும் கரண்ட் பில் குறையும். மேலும், ஏ.சி இல்லாதவர்கள் வீட்டிலும் கூட சிரட்டையை கொண்டு குளிர்ச்சியை உருவாக்க முடியும்.
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் மூன்று சிரட்டையை எடுத்து அதில் மணல் மற்றும் தண்ணீர் கொண்டு நிரப்ப வேண்டும். இதேபோல், சிரட்டை இருக்கும் பாத்திரத்திலும் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசர் பகுதியில் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் பாத்திரம் முழுவதும் ஐஸ்கட்டியாக மாறி விடும். இந்தப் பாத்திரத்தை டேபிள் ஃபேன் முன்பு வைத்து விட்டால், அறை முழுவதும் சில்லென காற்று வீசும். டேபிள் ஃபேன் இல்லையென்றால், சீலிங் ஃபேன் கீழும் இதனை வைக்கலாம். ஏ.சி-யை போடும் போது அறையில் குளிர்ச்சித் தன்மை பரவ நேரம் எடுக்கும். இப்படி செய்த பின்னர், அறைக்கு தேவைப்படும் போது மட்டுமே ஏ.சி-யை ஆன் செய்யலாம்.
ஏனெனில், இந்த சிரட்டை இருக்கும் அறை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் ஏ.சி-யின் தேவை குறையும். வீட்டில் ஏ.சி இல்லாதவர்களும் இந்த முறையை பின்பற்றலாம். இதில் இருந்து ஐஸ்கட்டி உருகினாலும், சிரட்டையில் இருக்கும் மணலின் காரணமாக நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கும்.