Advertisment

ரொட்டி, சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஈஸியான வெஜ் குருமா!

Veg Kurma Recipe: இது வீட்டில் இருக்கும்  அனைத்து பொருட்களிலிருந்தும் தயாரிக்கப்படும் சூப்பர் சுவையான வெஜ் குருமா.

author-image
WebDesk
New Update
Easy Veg Kuruma Recipe in Tamil, Veg korma

ஈஸியான வெஜ் குருமா

Easy Veg Kuruma Recipe: சுவையான உணவை யார் தான் விரும்ப மாட்டார்கள்? ரொட்டி, சப்பாத்திக்கு பருப்பு அல்லது வழக்கமான சைட் டிஷ் ரெசிபிகளை சாப்பிட்டு, நீங்கள் சலித்துவிட்டால், இந்த சுவையான, எளிதான மற்றும் சத்தான வெஜ் குருமாவை சாப்பிட வேண்டிய நேரம் இது. பரோட்டா, ரொட்டி, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு மிகச் சிறந்த காம்பினேஷனாக இந்த ரெசிபி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisment

மேக்னா'ஸ் புட் மேஜிக் சமையல் கலைஞர் மேக்னா காம்தாரின் வெஜ் குருமாவின் செய்முறையை இங்கே கொடுக்கிறோம். "இது வீட்டில் இருக்கும்  அனைத்து பொருட்களிலிருந்தும் தயாரிக்கப்படும் சூப்பர் சுவையான வெஜ் குருமா செய்முறையாகும்... செய்து மகிழுங்கள்" என்று அவர் கூறுகிறார்.

தேவையானப் பொருட்கள்

எண்ணெய்

2 - ஏலக்காய்

2 - பட்டை குச்சிகள்

2 - கிராம்பு

சிறிதளவு - கறுப்பு மிளகு

1 டீஸ்பூன் - சோம்பு / சீரகம்

1 - நன்றாக நறுக்கிய வெங்காயம்

3-4 - நன்றாக நறுக்கிய பூண்டு

1 இன்ச் - நன்றாக நறுக்கிய நறுக்கிய இஞ்சி

அரை தேக்கரண்டி - மஞ்சள் தூள்

1 தேக்கரண்டி - கொத்தமல்லி தூள்

6-7 - முந்திரி (நறுக்கியது)

1 தேக்கரண்டி - கசகசா (விரும்பினால்)

நன்றாக நறுக்கிய தக்காளி - சிறிதளவு

2 - பச்சை மிளகாய்

சிறிது நன்றாக நறுக்கிய தேங்காய் (ப்ரெஷ் / உலர்ந்த -  பிரவுன் தோலை அகற்றவும்)

கறிவேப்பிலை (விரும்பினால்)

நன்றாக நறுக்கிய பீன்ஸ்

நன்றாக நறுக்கிய கேரட்

நன்றாக நறுக்கிய சின்ன கத்திரிக்காய்

நன்றாக நறுக்கிய முட்டைக்கோஸ்

நன்றாக நறுக்கிய டோஃபு (எண்ணெயில் மேலோட்டமாக வறுக்கவும்)

நன்றாக நறுக்கிய நறுக்கிய கேப்சிகம்

உப்பு - தேவைக்கேற்ப

 

View this post on Instagram

 

Veg Korma Here it is the super flavorful veg korma recipe made from all available ingredients at home.... enjoy. Ingredients : Oil 2 pcs cardamom(elaichi) 2 cinnamon sticks(dalchini) 2 cloves(laung) black pepper(kali mirch) fennel seeds(saunf)/cumin seeds(jeera) finely chopped onions 3-4 pcs finely chopped garlic finely chopped ginger 1/2 tsp turmeric powder 1 tsp coriander powder 6-7 pcs cashews(chopped) poppy seeds(khus khus - optional) Some finely chopped tomatoes 2 pcs green chillies Some finely chopped coconut(fresh/dry - remove brown skin) curry leaves(optional) finely chopped french beans finely chopped carrots Salt finely chopped small brinjals finely chopped cabbage finely chopped tofu(shallow fried in oil) finely chopped capsicum Method : Heat up the pan add 1-2 tsp oil.(ghee-optional) Add 2 pcs of elaichi Add 2 cinnamon sticks Add 2 cloves Add some black pepper Add some fennel seeds(saunf- gives amazing fragrance)/cumin seeds Add some finely chopped onions and add some salt over it. Add 3-4 pcs finely chopped garlic Add some finely chopped ginger(cook it on medium to high flame) Add 1/2 tsp turmeric powder Add 1 tsp coriander powder Add 6-7 pcs cashews(chopped) Add some poppy seeds(khus khus - optional) Add some finely chopped tomatoes Add 2 pcs green chillies Now turn off the stove Add some finely chopped coconut(fresh/dry - remove brown skin)and mix it well. Let the mixture rest for a while And then grind it in the mixer jar. Heat up the pan pour 1tsp oil in it Add some curry leaves(optional) Add some finely chopped french beans Add some finely chopped carrots Add some salt as per taste and mix it Add some finely chopped small brinjals Add some finely chopped cabbage Add some finely chopped tofu(shallow fried in oil) (You can add any vegetables of your choice) Cover the lead and cook it for 6-7 mins Add some finely chopped capsicum Add the mixture(masala) and mix it well Add 1/2 cup water and keep mixing Cover the lead for 5 mins And then your Super Tasty Veg Korma is Tadahhh!!! Love M #ChefMeghna #VegKorma #PunjabiSabjee #indianFood #NewIdeas #Recipe #RecipeShare #Cooking #IndianFoodBloggers #FoodBlog #IndianFood #MumbaiEats #MumbaiFood

A post shared by Meghna’s Food Magic (@meghnasfoodmagic) on

செய்முறை

* கடாயை சூடாக்கி 1-2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.

* ஏலக்காய், இலவங்கப்பட்டை குச்சிகள், கிராம்பு, கறுப்பு மிளகு, பெருஞ்சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

* நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும். 3-4 துண்டுகள் நன்றாக  நறுக்கிய பூண்டு சேர்க்கவும்.

* பின்னர் நன்றாக நறுக்கிய இஞ்சியைச் சேர்க்கவும். (இப்போது நடுத்தரத்திலிருந்து அதிக தீயில் சமைக்கவும்).

* மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், 6-7 முந்திரி (நறுக்கியது), கசகசா, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.

* இப்போது அடுப்பை அணைக்கவும்.

* பின்னர் தேங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.

* இந்த கலவை சிறிது ஆறியதும், மிக்ஸில் போட்டு நன்கு அரைக்கவும்.

* கடாயை மீண்டும் சூடாக்கி அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றவும். அதில் கறிவேப்பிலை (விரும்பினால்), நன்றாக நறுக்கிய பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து, வதக்கவும்.

* அதில் நறுக்கிய கத்திரிக்காய், முட்டைக்கோஸ், டோஃபு (எண்ணெயில் வறுத்த) ஆகியவற்றை சேர்க்கவும்.

* கடாயை மூடி 6-7 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் நன்கு நறுக்கிய கேப்சிகம் சேர்க்கவும்.

* மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும்.

* கலவையில் ½ கப் தண்ணீர் சேர்க்கவும்.

* இப்போது மூடியை ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

* அவ்வளவு தான், ஈஸியான வெஜ் குருமா ரெடி!

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment