அவியல், தேங்காய் சாதம், தேங்காய் பால் செய்து சாப்பிடம் வேண்டும் என்று ஆசை இருந்தாலும் தேங்காய் துருவ கஷ்டமாக இருக்கிறது என்று தவிர்க்கிறீர்களா? உங்களுக்காகவே சில நிமிடங்களில் தேங்காய் துருவ ஒரு சுலப டெக்னிக் இதோ.
அனைவருக்கும் சாப்பிடுவது மிகவும் எளிது. சமைப்பது பிடித்தமான வேலையாக இருந்தாலும் கடினம்தான். அதிலும், இந்த தேங்காய் துருவது போன்ற வேலைகள் கடினமானது. அதனாலேயே, சிலர் தேங்காய் துருவ வேண்டிய உணவுகளை செய்யாமல் தவிர்ப்பதும் உண்டு.
அதிலும், அவியல், தேங்காய் சாதம், தேங்காய் பால் போன்றவற்றை செய்ய தேங்காய் துருவ கஷ்டப்பட்டுக்கொண்டு அதை செய்யாமல் தவிர்ப்பார்கள். இப்படி தேங்காய் துருவ கஷ்டப்படுபவர்களா நீங்கள் உங்களுக்காகவே தேங்காய் துருவ ஒரு சுலப டெக்னிக் ஒன்றை சமையல் கலைஞர் சிவராமன் தனது சிவராமன் கிட்சன் யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். தேங்காய் துருவ ஒரு ஈஸியான டெக்னிக் உங்களுக்காக. இந்த முறைப்படி தேங்காயைத் துருவி வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாமல் சமையலுக்கு பயன்படுத்தலாம்.
தேங்காயை எளிதாக உடைக்க வேண்டுமானால், முதலில் தேங்காயை தண்ணீரில் நனைத்துவிடுங்கள். அல்லது, குழாய் தண்ணீரில் தேங்காயை நனைத்துவிட்டால் உடைப்பதற்கு எளிதாக இருக்கும்.
தேங்காயை உடைத்து, தேங்காய் மூடிகளை இட்லி குண்டான் ஆவியில் 5-10 நிமிடங்கள் வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்படி எடுத்து வைத்துக்கொண்டால் ஒரு வாரம் வரை தேங்காயை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
இட்லி குண்டான் ஆவியில் 5-10 நிமிடங்கள் வைத்து எடுத்த தேங்காய் மூடியை நீங்கள் வழக்கமாக கத்தியால் தோண்டுவதைவிட எளிதாக தோண்டி எடுக்கலாம். பிறகு தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் ஒரு 10-15 நொடிகளில் அறைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை ஒருவாரம் வைத்திருந்து பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான், இனிமேல் தேங்காய் துருவ கஷ்டப்படாதீங்க, இந்த சுலப டெக்னிக்கை பயன்படுத்தி எளிதாக தேங்காய் துருவி வைத்துக்கொள்ளுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.