scorecardresearch

பீட்ரூட், மாதுளை, ஆரஞ்சு, வெங்காயம்… சில நொடிகளில் கட் பண்றது எப்படி? வீடியோ

எளிய முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்குவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

fruits and vegetables

சமயலின்போது அதிக அளவில் வேலை செய்ய வேண்டிய பகுதி என்னவென்றால், அது காய்கறிகளை கட் செய்வது தான்.

சமையலில் முக்கிய பங்கை வகிக்கும் முறை என்னவென்றால், காய்கறிகளை நறுக்குவது தான். இதில் பொரியல், அவியல், குழம்பு மற்றும் வறுவல் போன்ற வகைகளுக்கு ஏற்றாற்போல காய்கறிகளை கட் செய்யவேண்டும்.

இதில் வெவ்வேறு அளவில் காய்கறிகளை நறுக்கினால், நன்கு வேகாமல் உணவின் சுவையை கெடுக்கும்.

அப்படி காய்கறிகளை சுலபமாக கட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்:

வெங்காயம் கட் செய்யும் முறை:

  • முதலில் வெங்காயத்தின் தோலை உரித்து, செங்குத்தாக நிறுத்தி கொள்ளவும்.
  • பின்பு, அதன் நடுப்பகுதியில் இருந்து சுற்றி செங்குத்தான திசையில் நறுக்க வேண்டும்.
  • இதுபோல, வெங்காயத்தை சுற்றி கட் செய்த பிறகு, அதை வேறு திசையில் திருப்பி, கட் செய்யும்பொழுது சமமான அளவில் வெங்காய துண்டுகள் கிடைக்கும்.

மாதுளை வெட்டும் முறை:

  • மாதுளையின் நடுப்பகுதியில் வெட்டி, இரண்டு துண்டுகளாக பிரிக்க வேண்டும்.
  • பிரித்த பின்பு, அதில் ஒரு பகுதியை மறுபக்கமாக திருப்பிக்கொண்டு, அதன் மேல் பகுதியில் கரண்டியை வைத்து தட்டினால், உள்ளே இருக்கும் மாதுளை முத்துக்களை மிகவும் எளிதாக எடுக்கலாம்.

ஆரஞ்சு பழத்தை உரிக்கும் புதிய முறை:

  • ஆரஞ்சு பழத்தின் நடுப்பகுதியில் வெட்டவேண்டும்.
  • வெட்டிய பிறகு கிடைக்கும் இரண்டு பகுதிகளில், ஒன்றின் நடுப்பகுதியில் விதைகளை நீக்கிவிட வேண்டும்.
  • அதன்பிறகு பழத்தை நீண்ட துண்டுகளாக வெட்டினால், குழந்தைகளுக்கு பழத்தை உண்ண எளிமையாக இருக்கும்.

இதைப்போல, பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களை எளிமையாக நறுக்கும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை கண்டு தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Easy ways to cut and peel fruits and vegetables