டிஜிட்டல் கண் அழுத்தத்தைத் தடுக்க நிபுணர் சொல்லும் 20-20-20 விதி..
Protecting Your Eyes from Your Digital Devices | உங்கள் லேப்டாப், மொபைல் போன்களை இருண்ட அறையில் பயன்படுத்தாதீர்கள், அது கண்களில் அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
Protecting Your Eyes from Your Digital Devices | உங்கள் லேப்டாப், மொபைல் போன்களை இருண்ட அறையில் பயன்படுத்தாதீர்கள், அது கண்களில் அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
Eye health | Protecting Your Eyes from Your Digital Devices | நம்மில் பெரும்பாலோர் நமது நாளின் பாதிக்கு மேல் லேப்டாப் அல்லது மொபைல் போன்களில் செலவிடுகிறோம். இது இயற்கையாகவே நம் கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
Advertisment
லேப்டாப் ஸ்கீரின் முன் நீண்ட நேரம் செலவிடுவது கண் எரிச்சல், கண் சோர்வு மற்றும் பிற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி உங்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான நபர்கள் கண் நோய்களுடன் வாழ்கின்றனர், இந்தியாவில் மட்டும் மில்லியன் கணக்கான மக்கள் கண் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று விட்ரியோ-ரெட்டினல் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் மருத்துவர் என்எஸ் முரளிதர் கூறுகிறார்.
குருகிராமில் உள்ள பாராஸ் மருத்துவமனையின் கண் மருத்துவ ஆலோசகர் ரிஷி பரத்வாஜ், டிஜிட்டல் சாதனங்களைப் பார்ப்பதால் உங்கள் பார்வைக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறினார்.
Advertisment
Advertisements
ஆனால், அது அசௌகரியம் மற்றும் சிரமத்தை ஏற்படுத்தலாம். சராசரி மனிதன் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 15 முறை கண் சிமிட்டுகிறான். திரைகளைப் பார்க்கும்போது இந்த சதவீதம் பாதி அல்லது மூன்றில் ஒரு பங்காகக் குறைகிறது. இது வறண்ட, அரிக்கும் கண்களை ஏற்படுத்தும். இது computer vision syndrome (CVS) என்று அழைக்கப்படுகிறது, என்று அவர் மேலும் கூறினார்.
அப்படியானால், கண் சோர்வைத் தடுக்க உதவும் உடற்பயிற்சி ஏதேனும் உள்ளதா? ஆம், இது 20-20-20 விதி!
இதை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம் என்பது இங்கே:
நீங்கள் டிஜிட்டல் ஸ்கீரினில் செலவிடும் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் 20 வினாடிகள் சிறிய இடைவெளி எடுக்கவும். அந்த நேரத்தில், 20 அடி தூரத்தில் பார்க்கவும்.
இப்படி செய்வதால் டிஜிட்டல் ஸ்கீரினில் நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் கண் அழுத்தத்தைக் குறைக்கலாம், computer vision syndrome தடுக்க திரையில் இருந்து அடிக்கடி இடைவெளிகள் அவசியம், என்று மருத்துவர் முரளிதர் விளக்கினார்.
திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி உங்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும்
உங்கள் கண்களை கவனித்துக் கொள்ள சில குறிப்புகள் இங்கே.
லேப்டாப் ஸ்கீரினில் இருந்து ஓய்வு எடுப்பதால், உங்கள் தொலைபேசியில் நேரத்தை செலவிடலாம் அல்லது தொலைக்காட்சியைப் பார்க்கலாம் அல்லது புத்தகத்தைப் படிக்கலாம் என்று அர்த்தமல்ல. உங்கள் கண்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். எனவே நீங்கள் சில இசையைக் கேட்பதன் மூலமோ அல்லது யாரிடமாவது பேசுவதன் மூலமோ நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்த நேரத்தில் கண்ணிமைகளை மூடி மூடி திறக்கலாம்.
நீங்கள் கண்ணாடி அணிந்தால், அவற்றை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் கண்களை அதிகமாகத் தொடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது வைரஸிற்கான நுழைவாயிலாகும்.
கண் அழுத்தத்தின் அறிகுறியான கண் சிவந்து போனால், மருந்தகத்தில் கிடைக்கும் கண் சொட்டுகளை (lubricating eye drops) பயன்படுத்தலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த வித கண் சொட்டு மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம்.
மடிக்கணினியைப் பயன்படுத்தும்போதோ புத்தகம் படிக்கும்போதோ படுத்துக் கொள்ளாதீர்கள். இருண்ட அறையில் உங்கள் மடிக்கணினியில் வேலை செய்யாதீர்கள், அது கண்களின் அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
நீங்கள் கண் எரிச்சல், அரிப்பு, நீர் வடிதல் அல்லது கண்ணில் சிவத்தல் போன்றவற்றை எதிர்கொண்டால் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“