/indian-express-tamil/media/media_files/2025/05/14/iOsh4VlEDzLZbhIxEZTh.jpg)
முட்டி வலி சுத்தமா இருக்காது... ஆன இந்த உணவை மட்டும் தப்பித் தவறி தொடாதீங்க: டாக்டர் பிள்ளை
இன்றைய காலத்தில் வயதானவர்கள் மட்டுமின்றி, இளம்வயதில் இருப்பவர்களுக்கும் மூட்டுவலி பெரிய பிரச்னையாக உள்ளது. மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதும், உடற்பயிற்சி செய்வதும் மூட்டு வலியையும், வீக்கத்தையும் குறைக்கும். மனித உடம்பில் எலும்புகளின் கட்டமைப்பில்தான் உடலுக்கு வடிவமும், பலமும் கிடைக்கிறது. கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற வைட்டமின்களும், புரதமும் மூட்டுகளுக்கு வலுவூட்டும் என்கிறார் மருத்துவர் பிள்ளை.
முட்டி வலியால் அவதிப்படுபவர்களாக இருந்தால் உணவில் இந்த 5 உணவு வகைகளை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள். முட்டி வலியால நடக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் கூட இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம் என்கிறார் மருத்துவர் பிள்ளை.
முட்டி வலி குணமாக சாப்பிட வேண்டிய 5 உணவுகள்:4. பால் பொருட்கள்: வலுவான எலும்புகளுக்கு, பால் பொருட்கள் அதாவது பால், தயிர், வெண்ணெய், நெய் மற்றும் பாலாடைக்கட்டி அவசியம். கால்சியம் மற்றும் வைட்டமின் D-ன் சிறந்த ஆதாரங்கள். இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்பு அடர்த்தி மற்றும் பற்கள் வலிமையை பராமரிக்க உதவும்.
5. நட்ஸ் & சீட்ஸ்: பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் வால்நட் போன்ற எடுத்துக்காட்டுகள் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. அவை மூட்டு வலிமை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கின்றன. ஒரு கைப்பிடியை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் பிள்ளை.
தவிர்க்க வேண்டிய (அ) குறைக்க வேண்டிய உணவுகள்:
சில உணவுகள் உங்கள் முழங்கால் ஆரோக்கியத்திற்கு எதிராக வேலை செய்து, வீக்கத்தை அதிகரித்து, இடையூறு விளைவிக்கும். இதனை தவிர்ப்பது அல்லது கணிசமாகக் குறைப்பது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் மருத்துவர் பிள்ளை. பாஸ்ட் ஃபுட் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், அதிக உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் மூட்டு வீக்கத்திற்கும் உடல் எடை அதிகரிக்கவும் செய்கிறது. இதனால் உங்கள் முழங்கால்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், பேக்கரி பொருட்கள், துரித உணவு ஆகியவை பெரும்பாலும் அழற்சி ஏற்படுத்தும் பொருட்களில் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் குறைவாகவும் இருக்கும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் பிள்ளை. வெள்ளை சர்க்கரை மூட்டு வலியை அதிகரிக்கச் செய்யலாம். மிதமாக இயற்கை இனிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.