தினமும் சிறிது வேர்க்கடலை… நம்பமுடியாத நன்மை உங்களுக்கு!

Health News in Tamil : நாள் ஒன்றுக்கு குறைந்தது 10 கிராம் வேர்க்கடலையை ஆண்கள், பெண்கள் என சாப்பிட்டு வர, உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களாக கருதப்படுபவைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் விவசாயத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது வேர்க்கடலை சாகுபடி. பொழுதுப்போக்கு திண்பண்டமாக திகழும் வேர்க்கடலையை பிடிக்காது என்போர், தமிழகத்திலேயே இல்லை என சொல்லலாம். இவ்வாறு, நம்மோடு கலந்த வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு வர, நம்பமுடியாத பலன்களை நாம் பெறலாம்.

இதய நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் புற்றுநோய்க்கு உள்ளானோர், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், தொடர்ந்து வேர்க்கடலையை சாப்பிட்டு வர, நோய் தாக்குதலால் ஏற்படும் முந்தைய உயிரிழப்புகளை தடுக்கலாம்.

நாள் ஒன்றுக்கு குறைந்தது 10 கிராம் வேர்க்கடலையை ஆண்கள், பெண்கள் என சாப்பிட்டு வர, உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களாக கருதப்படுபவைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். வேர்க்கடலையை சாப்பிடுகிறேன் என்ற பெயரில், சந்தைகளில் விற்கப்படும் பீனட் பட்டர்களை வாங்கி சாப்பிட்டு வந்தால் எந்த பயனும் ஏற்படாது என நெதர்லாந்து நாட்டின் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகம் நடத்திய் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனென்றால், வேர்க்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் பீனட் பட்டரில் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் மற்றும் உப்புச் சத்துகள் இருப்பதால் வேர்க்கடலையிலிருந்து கிடைக்கும் நல்ல பயன்களை தடுக்கிறது.

வேர்க்கடலைக்கும், மரங்களிலிருந்து பெறப்படும் கடலை வகைகளிலும் பல்வேறு ஊட்டச்சத்து செறிந்து காணப்படுகின்றன. குறிப்பாக, வைட்டமின்கள், நார்ச்சத்துகள், ஆக்ஸிஜனேற்றிகள், மோனோசாச்சுரேட்டட், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளன. இவை, மனிதர்களில் இறப்பு விகிதங்களை குறைப்பதாக நெதர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வேர்க்கடலையை தொடர்ச்சியாக பெண்கள் சாப்பிட்டு வர, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படாது எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Eat few peanuts to slash early death from cancer

Next Story
அரிசி மாவு ஃபேஸ் வாஷ், ஐஸ் கட்டி மசாஜ்.. ‘பிக் பாஸ்’ ஷெரின் பியூட்டி சீக்ரெட்ஸ்!Bigg Boss Sherin Beauty Secrets Skincare Tips Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com