குடலில் ஒட்டி இருக்கும் புழுக்களை விரட்டும்... இந்த விதைகளை இப்படி சாப்பிடுங்க: டாக்டர் தீபா

பூசணிக்காயின் உள்ளே இருக்கும் சிறிய விதைகளை நாம் பெரும்பாலும் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், இந்தச் சிறிய விதைகள் எண்ணற்ற ஆரோக்ய நன்மைகளை உள்ளடக்கிய பொக்கிஷம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பூசணிக்காயின் உள்ளே இருக்கும் சிறிய விதைகளை நாம் பெரும்பாலும் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், இந்தச் சிறிய விதைகள் எண்ணற்ற ஆரோக்ய நன்மைகளை உள்ளடக்கிய பொக்கிஷம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

author-image
WebDesk
New Update
Pumpkin Seeds

குடலில் ஒட்டி இருக்கும் புழுக்களை விரட்டும்... இந்த விதைகளை இப்படி சாப்பிடுங்க: டாக்டர் தீபா

பூசணிக்காயின் உள்ளே இருக்கும் சிறிய விதைகளை நாம் பெரும்பாலும் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், இந்தச் சிறிய விதைகள் எண்ணற்ற ஆரோக்ய நன்மைகளை உள்ளடக்கிய பொக்கிஷம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பலவிதமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன என்கிறார் மருத்துவர் தீபா.

Advertisment

பாரம்பரிய மருத்துவத்தில் பூசணி விதைகளின் மருத்துவ குணங்கள் பல நூற்றாண்டுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நவீன அறிவியலில் இதய ஆரோக்கியம் முதல் பளபளப்பான சருமம் வரை பல்வேறு நன்மைகளை பூசணி விதைகள் வழங்குகின்றன.

பூசணி விதைகளில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் உருவாகும் தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. இவை செல்களை சேதப்படுத்தி புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். உங்கள் அன்றாட உணவில் பூசணி விதைகளைச் சேர்ப்பது உடலின் இயற்கையான பாதுகாப்பை வலுப்படுத்தும் என்கிறார் மருத்துவர் தீபா. 

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறனைத் தாண்டி, பூசணி விதைகள் இதய ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. மெக்னீசியம் நிறைந்திருப்பதால், அவை ரத்த அழுத்தத்தை சீராக்கவும், சீரான இதயத் துடிப்பை பராமரிக்கவும் உதவுகின்றன. பூசணி விதைகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு மேலும் பங்களிக்கின்றன. 

Advertisment
Advertisements

இளமை தோற்றத்தைப் பராமரிப்பது நாம் அனைவரும் விரும்பும் ஒன்று. பூசணி விதைகள் இதற்கு உதவக்கூடும். சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகின்றன. சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகின்றன. மேலும், அவற்றின் ஊட்டச்சத்துக்கள் வயதான எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன என்கிறார் மருத்துவர் தீபா.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு, பூசணி விதைகள் இயற்கையான தீர்வாக அமைகின்றன. அவற்றின் தனித்துவமான கலவை ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. பூசணி விதைகள் குழந்தைகளின் உடலில் உள்ள குடல் புழுக்களை எதிர்த்துப் போராடுகின்றன. இவை, குடல் புழுக்களை மலத்துடன் சேர்த்து வெளியே தள்ள உதவும் என்கிறார் மருத்துவர் தீபா.

பூசணி விதைகளில் உள்ள சத்துகள்:

இதில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம். பூசணி விதைகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். சாலட்கள், தயிர் அல்லது ஓட்ஸில் தூவி சாப்பிடலாம். சத்தான சிற்றுண்டிக்காக சேர்க்கலாம். உங்களுக்குப் பிடித்த மசாலாப் ருட்களுடன் வறுத்து சுவையான உணவாகவும் உண்ணலாம் என்கிறார் மருத்துவர் தீபா.

Health benefits of pumpkin seeds

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: