நாம் முட்டையை காலை வேளையில் சாப்பிடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, பி5, பி12, டி, இ, கே மற்றும் பி6, போலேட், பாஸ்பரஸ், செலினியம், கால்சியம், சிங் புரத சத்து உள்ளிட்ட சத்துகள் உள்ளது.
இதில் 9 முக்கிய அமினோ ஆசிட் உள்ளது. இவை புரத சத்தை உருவாக்க உதவும். இந்நிலையில் இந்த புரத சத்தை உங்கள் உடல் தனியாக ஏற்படுத்த முடியாது.
கொலஸ்ட்ரால் என்பது உடலுக்கு தேவையான ஒன்று. இந்நிலையில் முட்டையை தொடர்ந்து சாப்பிட்டால் எச்.டி.எல் கொலஸ்ட்ரால் அதாவது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.
டிரைகிளிசரைட்ஸ் என்பது ஒருவகை கொழுப்பு சத்து நமது ரத்தத்தில் உள்ளது. இந்த அளவு அதிகரித்தால், இதய நோய் மற்றும் ஸ்டோக் ஏற்படும். முட்டையை தொடர்ந்து சாப்பிட்டால், இந்த அளவை குறைக்க உதவும்.
வாரத்திற்கு 3 முட்டைகளை சாப்பிட்டால், இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படும் சாத்தியங்கள் குறையும். இதுவரை நடந்த ஆய்வில், வாரத்தில் 4 முதல் 7 முட்டைகளை சாப்பிட்டால் இதய நோய் ஏற்படும் அபாயம் 75% குறையும்.
முட்டையை நாம் சாப்பிடும்போது, அதிகம் பசிக்காது. அதிக நேரம் பசி எடுக்காமல் அதிகம் சாப்பிட்டது போல ஒரு நிறைவான உணர்வை கொடுக்கும்.
முட்டையில் வைட்டமின் ஏ, லுடியின், சிங்க் மற்றும் சியாக்ஸந்தின் உள்ளது. இது கண் பார்வை ஆரோக்கியத்திற்கு உதவும். கருவிழிப்படலத்தை காப்பாற்றும் குணங்கள் முட்டையில் இருக்கிறது.
இதில் வைட்டமின் டி உள்ளது, இது மூளையிக்கு முக்கியத் தேவையாக இருக்கிறது. மேலும் இதில் சோலின் இருப்பதால், இது வீக்கத்தை குறைக்கும். மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
இதில் சரியான கலோரிகள் மற்றும் புரத சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்கும். மேலும் இதில் உள்ள சிங்க் மற்றும் செலீனியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“