வேகமா சாப்பிட்டா உங்க வயித்துக்குள்ள என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் வீடியோ- விளக்கும் நிபுணர்

மின்னல் வேகத்தில் சாப்பிடுவது நல்லதா? செரிமான கோளாறுகள், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுமா? ஏன் ஏற்படுகிறது? தவிர்க்க வேண்டிய உணவு முறைகள் என்ன?தெரிந்து கொள்ளுங்கள்.

மின்னல் வேகத்தில் சாப்பிடுவது நல்லதா? செரிமான கோளாறுகள், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுமா? ஏன் ஏற்படுகிறது? தவிர்க்க வேண்டிய உணவு முறைகள் என்ன?தெரிந்து கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Eating quickly digestion issues

This is what happens inside the stomach when you eat very quickly

சிலர் உணவை மிக வேகமாக சாப்பிடுகிறார்கள். இந்த பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். வயிறு உப்புசம், வாயு தொல்லை மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்ற சிக்கல்களுக்கு இது வழிவகுக்கும். இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று இதை ஒரு பரிசோதனை மூலம் விளக்குகிறது: அந்த வீடியோவில், ஒருவர் இரண்டு ஜிப்-லாக் பைகளில் தண்ணீரை ஊற்றி, அதில் சமையல் சோடாவை போடுகிறார். சமையல் சோடாவை மிக வேகமாக போட்டால், தண்ணீர் நிரம்பி வழியும். இது நம் வயிற்றில் உணவு நிரம்பி வழிவது போன்றது. 
எனவே வயிற்றுக்கு அசௌகரியம் இல்லாமல் செரிமானம் செய்ய மெதுவாக உணவு சாப்பிட வேண்டும்.

Advertisment

இது ஏன் நடக்கிறது?

(Senior consultant in internal medicine at Gleneagles Hospital Parel Mumbai) டாக்டர் மஞ்சுஷா அகர்வால் கூறுகையில், வேகமாக சாப்பிடும்போது அதிகப்படியான காற்றை விழுங்குவதே இதற்கு முக்கிய காரணம்.

"நீங்கள் உணவை சரியாக மென்று சாப்பிடாதபோது, உங்கள் வயிறு அதை உடைக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இது மேலும் அஜீரணம் மற்றும் அசிடிட்டிக்கு வழிவகுக்கும். உங்களுக்கு வயிறு நிரம்பியிருக்கிறதா இல்லையா என்பதை உங்கள் மூளை அடையாளம் காண்பதையும் இது தடுக்கிறது. இது அதிகமாக சாப்பிடுவதற்கும் உடல் எடை அதிகரிப்பதற்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

Advertisment
Advertisements

gut health

வேகமாக சாப்பிடுவது செரிமானத்திற்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும், இது ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் கடுமையான வயிற்றுப் வலிக்கு வழிவகுக்கும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் குறைக்கும். அதனால்தான் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து மெதுவாக சாப்பிடுவது மிகவும் முக்கியம்”, என்று டாக்டர் அகர்வால் கூறினார்.

மெதுவாக, நிதானமான வேகத்தில் சாப்பிடுவது, உங்கள் செரிமான அமைப்பு சீராக செயல்பட உதவுகிறது. மேலும் உணவில் இருந்து தேவையான ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாக உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.

டிப்ஸ்

உணவை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பெரிய கவளங்களாக எடுப்பதை தவிர்க்கவும். எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் அமைதியான சூழலில் சாப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், உணவு உண்ணும் போது தண்ணீர் குடிக்காதீர்கள், ஏனெனில் அது உங்களை விரைவில் நிரம்பச் செய்யும். அதற்கு பதிலாக, செரிமானத்திற்கு உதவ உணவு உண்பதற்கு 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க முயற்சிக்கவும், என்று டாக்டர் அகர்வால் பகிர்ந்து கொண்டார்.

உணவுப் பழக்கங்களில் செய்யும் எளிய மாற்றங்கள் குடல் ஆரோக்கியத்தையும் நீண்ட கால ஆரோக்கியத்தையும் கணிசமாக பாதிக்கும்.

Read in English: This is what happens inside the stomach when you eat very quickly

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: