த. வளவன்
வளர்ச்சிக்கான பாதையில் கிடக்கும் தடைகளை அகற்றி விட்டு தயக்கங்களை விரட்டி அடுத்த அடியை எடுத்து வைத்தால் மட்டுமே நம்மால் இலக்கை அடைய முடியும். தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற இன்றைய உலகில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அதிகளவில் தொழில் முனைவோராக அவதாரம் எடுத்து வருகிறார்கள். அதில் ஆண்களை விட பெண்கள் சந்திக்கும் சவால்களே அதிகம். அந்த வகையில் ஒரு பெண்ணை தலைமை செயல் அதிகாரியாக நியமித்து பெண்கள் சுயசார்பில் அக்கறை செலுத்தி வருகிறது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நெல்லையிலும் கிளை பரப்பி நிற்கும் இ கேர் இந்தியா (E.care.India) நிறுவனம்.
வளர்ந்து வரும் இந்தியாவில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றனர். எனினும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சுயசார்பு நிலையை அடையாமலே இருக்கிறார்கள். இன்றைய இளம்பெண்களில் பலர், குடும்பத்தினர் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும், தங்களது சுயசார்பு மற்றும் சுதந்திரத்துக்கும் இடையில் குழம்பிய நிலையிலேயே உள்ளனர். குடும்பம், தொழில் என இரண்டு விஷயங்களையும் சமமாக கவனிக்க வேண்டிய அவசியம் பெண் தொழில் முனைவோருக்கு உள்ளது. பெரும்பாலான பெண்கள் குடும்ப உறவுகள் அதை சார்ந்த விஷயங்கள் என்று குடும்பத்தின் பாசப்பிணைப்புக்குள் தங்களை முடக்கி கொள்கிறார்கள். குடும்பமா, தொழிலா என்ற நிலையில் குடும்பம் தான் இறுதியில் வெற்றி பெறுகிறது. அதனால் பலரும் தொழிலை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். எனவே தன்னம்பிக்கையோடு குடும்பத்தையும் தொழிலையும் சமன் செய்து கொண்டு செல்லும் திறமையை பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்கிறார் நெல்லை இ கேர் நிறுவனத்தின் பெண் தலைமை செயல் அதிகாரி ஜெயபாலா. வளர்ச்சிக்கான பாதையில் கிடக்கும் தடைகளை அகற்றி விட்டு தயக்கங்களை விரட்டி அடுத்த அடியை எடுத்து வைத்தால் மட்டுமே நம்மால் இலக்கை அடைய முடியும். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இன்றைய உலகில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அதிக அளவில் தொழில் முனைவோராக அவதாரம் எடுத்து வருகிறார்கள். அதில் ஆண்களைவிட பெண்கள் சந்திக்கும் சவால்களே அதிகம். அந்த வகையில் ஒரு பெண்ணை தலைமை செயல் அதிகாரியாக நியமித்து பெண்கள் சுயசார்பில் அக்கறை செலுத்தி வருகிறது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நெல்லையிலும் கிளை பரப்பி நிற்கும் நெல்லை இ கேர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெயபாலா, அவரிடம் பேசினோம். தகவல் தொழில் நுட்பத்துறையில் பெண்களை ஒருங்கிணைக்கும் ஆர்வம் குறித்தும் இந்த துறையில் அவர் சந்தித்த சோதனைகள் மற்றும் சாதனைகள் குறித்து கேட்டோம்.
வளர்ந்து வரும் இந்தியாவில் பெண்கள் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றனர். எனினும் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சுயசார்பு நிலையை அடையாமலே இருக்கிறார்கள். இன்றைய இளம்பெண்களில் பலர், குடும்பத்தினர் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும், தங்களது சுயசார்பு மற்றும் சுதந்திரத்துக்கும் இடையில் குழம்பிய நிலையிலேயே உள்ளனர். எங்கள் நிறுவன மேலாண்மை இயக்குனர் தீபக் குமார் சாங்கி, பெண்கள் சுயசார்பு அடைவதே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பதில் அதிக நம்பிக்கை வைத்துள்ளார். அதன் அடிப்படையில் பெண்களின் முன்னேற்றம் பேணும் வகையில் நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு அவர்களின் திறமையின் அடிப்படையில் தேர்வு வைத்து ஊழியர்களை தேர்வு செய்கிறோம்.
ஐ. டி நிறுவனம் என்றாலே முதல் தேவை ஆங்கில அறிவு, பேச்சுத்திறன் மற்றும் உணரும் திறன் போன்றவை தான். நமது மாவட்டத்தில் கல்வி கற்பவர்களுக்கு ஆங்கிலம் புரிந்து கொள்ளும் திறனும் தொடர்பு கொள்ளும் திறனும் சற்று குறைவாக இருக்கும். எனவே நாங்கள் அவற்றை மேம்படுத்த அவர்களை ஊக்குவிக்கிறோம். ஒரு முறை தேர்வில் தோல்வி அடைந்தவர்களை நிராகரிப்பதில்லை. என்ன செய்தால் இந்த வேலை கிடைக்கும் என்பதை அறிவுறுத்துகிறோம். தொடர்ந்து முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தியத்தின் விளைவு, எமது நிறுவனத்தில் இன்று 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணி செய்து வருகின்றனர்.
வேலை செய்யும் இடங்களில் பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எமது நிறுவனம் உணர்ந்துள்ளது. மாலை வேளையில் சற்று தாமதமானால் கூட அவர்களை எமது பிரத்தியேக வாகனங்கள் மூலமாக பஸ் நிலையத்தில் இறக்கி விடவும் எங்களிடம் வசதி உண்டு. தேவைப்படுகிறவர்கள் அந்த வசதியை பயன்படுத்திக் கொள்கின்றனர். அலுவலுவலக பிரச்சனைகளை எமது அலுவலக மனிதவள மேலாண்மை துறை பார்த்துக் கொள்ளும் என்றவரிடம் பெண்கள் முன்னேற்றம் குறித்த எதிர்கால திட்டங்கள் பற்றி கேட்டோம்.

தாங்கள் நினைத்ததை, பிறரை சார்ந்து இல்லாமல் சரியான தருணத்தில் தாமாகவே செய்து கொள்ளும் தன்னிச்சையே சுயசார்பு. தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்குக்கூட பிறரின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பது தவறு. இது நம் முன்னேற்றத்தை முடக்கும். இல்லத்தரசிகள் முதல் விண்ணை நோக்கி பயணிக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் சுயசார்பு அவசியம். இது மனதுக்கு புத்துணர்வு அளித்து, முழுமையான தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபட உந்துதலாக அமையும். இப்பாதையில் பயணிக்கும் பெண்களுக்கு தானாகவே தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். இந்த தன்னம்பிக்கை அவர்களின் சிறுசிறு மகிழ்ச்சிக்கும் சிறகுகளை அளித்து உயர பறக்க வழி வகுக்கும். அதற்கு எங்கள் நிறுவன நிர்வாக இயக்குனர் தீபக் குமார் சாங்கி மூலம் வழிவகை செய்து கொடுக்க முடியும் என்று நம்புகிறேன் என்றார்.
இ கேர் இந்தியா ( E.care.India) நிறுவன நிர்வாக மேலாண்மை இயக்குனர் தீபக் குமார் சாங்கியிடம் பேசினோம். சென்னையை தலைமையிடமாக கொண்டு அமெரிக்காவின் புளோரிடா, நெல்லை என மூன்று கிளைகளுடன் செயல்பட்டு வருகிறோம். கூட்டாண்மை சமூக பொறுப்பு எனப்படும் கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி (Corporate Social Responsibility) இணங்க அரசு பள்ளிகளை மேம்படுத்த திட்டங்களும் எங்களிடம் உண்டு. பெண்களின் முன்னேற்றமே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்று சொல்வார்கள். அதை மனதில் கொண்டு நெல்லையில் எங்களது பெண் அலுவலர் ஜெயபாலாவை நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமித்து நெல்லை கிளையை தொடங்கினோம். இன்று அவரது தலைமையின் கீழ் 300 பெண்களுக்கும் மேல் சிறப்பாக பணி செய்து வருகின்றனர். நெல்லையில் எங்களுக்கு கிடைத்த அனுபவத்தில் விளைவாக அரசுப் பள்ளிகளை மேலும் சீரமைக்க ஆரம்பித்தோம். சென்னையில் பனையூர் அரசு பள்ளியில் அடிப்படை தேவைகளை சுமார் 5 லட்சம் செலவில் சீரமைத்து கொடுத்தோம். மறுபடியும் எங்கள் நெல்லை கிளை நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெயபாலா சொன்ன படி நெல்லை டவுன் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2011ல் 3 வகுப்பறைகளை சீரமைத்தோம். பழுதடைந்த மேற்கூரையை செப்பனிட்டோம். மாணவ, மாணவிகளின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, நவீன கழிப்பறைகள். அமர டெஸ்க் மற்றும் பெஞ்சுகள் என சுமார் 5 லட்சம் செலவில் பணிகளை செய்துள்ளோம். இன்னும் அவர்கள் கேட்டுக்கொண்டால் மேலும் உதவிகள் செய்ய காத்திருக்கிறோம், என்றார்.
அதனை அவன் கண் விடல் என்றார் திருவள்ளுவர். பெண்கள் முன்னேற்றத்தை வெறும் வார்த்தகளில் மட்டும் சொல்லாமல் ஒரு திறமையான பெண்ணிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்து ஒன்றை பத்தாக்கியிருக்கிறார் இ கேர் இந்தியா நிறுவனத்தினர். நெல்லை பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார் நெல்லை இ கேர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெயபாலா. அதன் மூலம் 300க்கும் மேலான பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளது இ கேர் இந்தியா நிறுவனம் என்கின்றனர் இந்த நிறுவன பெண் ஊழியர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“